முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அம்னோ இப்போது நஜிப்புக்குச் சொந்தமான கட்சியாக மாறிவிட்டது என்று சொல்லி வருத்தப்பட்டார்.
தாமும் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினும் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருப்பது பற்றி அவர் கருத்துரைத்தார்.
“எந்தவொரு காரணமும் இல்லை என்றாலும் என்னை விலக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது. ஏனென்றால் அதிகாரம் அவரிடம் உள்ளது”, எனக் கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் மகாதிர் கூறினார்.
அம்னோ உறுப்பினர் என்ற முறையில் கருத்துச் சொல்லும் உரிமை தமக்கு உண்டு என்றாரவர்.
“ஆனால், இப்போது பிரதமரை அல்லது கட்சித் தலைவரைக் குறை சொல்பவர்கள் கட்சியிலிருந்து விலக்கப் படுகிறார்கள்.
“அம்னோவின் கட்சிபோல் தெரியவில்லை, நஜிப்பின் கட்சிபோல் ஆகிவிட்டது.
“நான் கட்சியைக் குறைகூறவில்லை, நஜிப்பைத்தான் குறை சொன்னேன்”, என்றும் அவர் வலியுறுத்தினார்.
வேறு வழி இல்லை! அவர் கட்சியில் நீடிக்க வேண்டுமே!
நீர் காட்டிய வழி!. நீர் போட்ட சட்டம்! அரசியல் கட்சிகளில் சர்வாதிகாரம் தலை தூக்கியது எல்லாம் உன் செயலே! எல்லாமே இப்பொழுது உன் முன்னே வந்து தாண்டவமாடுவதைப் பார்த்து ஒப்பாரி வைப்பதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகின்றது.
மாம்ஸ் குட்டிக்கு காக்காய் வழுப்பும் ,மாரடைப்பும் ஆரம்பமாகிவிட்டது ,,,