கட்சிக்காரர்களின் நடவடிக்கைக்கு வழக்குரைஞர்களைப் பொறுப்பாக்கக் கூடாது என வழக்குரைஞர் மன்ற உறுப்பினர் ஷியாரெட்சான் ஜொஹான் அதிகாரிகளுக்கு நினைவுறுத்தினார்.
வழக்குரைஞர் அமெரிக் சித்து, அவரின் கட்சிக்காரர் சார்ல்ஸ் மொராய்ஸின் அறிக்கை தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் எனப் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு அபு பக்கார் கூறியிருப்பதை அடுத்து அவர் இவ்வாறு கூறினார்.
“இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அமெரிக் ஒரு வழக்குரைஞர் என்ற முறையில்தான் செயல்பட்டிருக்கிறார்”, என ஷியாரெட்சான் முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.
கட்சிக்காரர்களைப் பிரதிநிதிக்கிறார்கள் என்பதற்காக கட்சிக்காரர்களின் செயல்களுக்கு வழக்குரைஞர்களைப் பொறுப்பாக்கக் கூடாது என்ற நியதியை அதிகாரிகள் மதிக்க வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.
மலேசியா போலிஸ் ……….. இந்த பயல்களுக்கு லஞ்சம் வாங்கித்தான் பழக்கம் கடவுள் மேலே கூட நசிப்பும் ரோச்மாவும் பலி சுமர்தினால் கடவுளையும் கைது செய்வான் மலேசியா போலிஸ்
நல்ல சொன்னீர்
மங்கோ ———-m.i.c.