எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன் தோற்கடிக்கப்படும் சாத்தியம் இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், அம்னோவின் அடிமட்ட உறுப்பினர்கள் நஜிப்பை அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கூறுகிறார்.
நஜிப்பின் தலைமைத்துவம் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நிராகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அம்னோ பாதுகாப்பாக இருப்பதோடு தேர்தலில் வெற்றி பெற்று அனைவருக்கும் நியாயமான அரசாங்கமாக நிலைத்திருக்கும் என்று மகாதிர் அவரது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள கடிதத்தில் கூறுகிறார்.
அரசாங்கம் மற்றும் கட்சியின் இயந்திரங்களைப் பயன்படுத்தி மக்களைச் சந்திப்பதிலிருந்து தம்மை தடுக்கும் நடவடிக்கைகள் சிறப்பாக இயங்குகின்றன. அதுவே தவறுகள் நடக்கின்றன என்பதற்கு ஆதாரங்கள் ஆகும் என்று அவர் கூறுகிறார்.
அம்னோ ஆண்டுப் பொதுக்கூட்டம் டிசம்பர் 8 லிருந்து 12 வரையில் நடைபெறவிருக்கிறது.
கட்சி என்ற அடிப்படையில் அம்னோவின் போராட்டத்தின் விளைவாக மலேசியா உருவானது; எந்த ஒரு தனிப்பட்ட ஒருவரால் அல்ல என்றாரவர்.
ஆனால், இப்போது விசுவாசம் என்பது ஒரு தலைவருக்காக இருக்கிறது, அம்னோவுக்கோ, இனத்திற்கோ, சமயத்திற்கோ, அல்ல என்று மகாதிர் வருத்தப்பட்டுக் கொண்டார்.
“நஜிப்பை ஆதரிப்பது குறிப்பிட்ட சிலருக்கு இலாபகரமானதாக இருக்கலாம். ஆனால், பிஎன் தோற்றால் இவை அனைத்தும் இல்லாமல் போய்விடும்.
“சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களைப் போல் 14 ஆவது பொதுத் தேர்தலில் கட்சி தோல்வி அடைவதற்கான பெரும் சாத்தியம் இருக்கிறது.
“அதன் பின்னர் பின் மற்றும் அம்னோ எதிர்க்கட்சியாகி ஆகிவிடும். எதிர்க்கட்சி என்ற முறையில் அம்னோ இனத்திற்கும், நாட்டிற்கும், சமயத்திற்கும் எதுவும் செய்ய முடியாது”, என்று மகாதிரி அவரின் திறந்த மடலில் கூறியுள்ளார்.
மாறாக, நஜிப் அம்னோ தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளிலிருந்து விலகிக் கொண்டாரானால், அம்னோ மீட்சி பெற்று பிஎன் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான மாபெரும் வாய்ப்பு இருக்கிறது என்றாரவர்.
அம்னோ உறுப்பினர்களை சிந்திக்குமாறு கேட்டுக் கொண்ட மகாதிர், தற்போது பெற்ற வெகுமானங்கள் காரணமாக கண்மூடித்தனமான விசுவாசம் அல்லது ஆதரவு அளிப்பது குறித்து உறுப்பினர்களை அவர் எச்சரித்தார்.
“நீங்கள் பாதுகாப்பாக இருக்கவும் அடுத்த தேர்தலில் வெற்றி பெறவும் விரும்பினால், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் நஜிப்பின் தலைமைத்துவத்தை நிராகரியுங்கள்”, என்று மகாதிர் முகமட் கூறினார்.
மகாதிரே நீங்கள் சிந்தியை கசக்கி பிழிந்து நன்குடையாலரை எத்தனை தண்ணியில் போட்டு வெகவெச்சாலும் வேகமாட்டேங்க்குதே.14தெர்தலில் பீ என் தொற்று விடுமா?தேர்தல் ஆணையர் இருக்கும் வரை பீ என் வெற்றிக்கு .உறுதுணையாக கதவை ஆடைப்பார்.விளக்கை அடைப்பார்.
இதோ நான் திறந்த மடல் எழுதுகிறேன் மக்களே நாட்டு மக்களே நல்ல புத்தியுள்ள மக்களே வருகின்ற பொது தேர்தலில் BN kku வோட்டு போடாதீங்க . அப்படி போட்டீர்களானால் உங்களை போன்ற மக்கு சாம்பிராணிகள் உலகிலயே இருக்கமுடியாது .
மூடிய மடல் அனுப்பவும் . ஒரு நாள் நண்பன் அவனே ஒரு நாள் எதிரி .
அடுத்த பொதுத்தேர்தலிலும் ஆட்சியில் அமரப் போவது தேசிய முன்னணியே. ஆம்! இன்னும் இரண்டு ஆண்டுகளில் நஜிப்பின் பெயர் நாறிவிடும். உடனே அனைத்து அம்னோ தலைவர்களும் உட்கார்ந்து ஓர் தீர்வு காண்பர். நஜிப் பதவி விலகுவார். வெளிநாட்டில் சொத்து சுகங்களுடன் வாழ அவருக்கு வழி வகுக்கப்படும். மற்றொரு புதிய தலைவர் உருவாக்கப்படுவார். “புதியவருக்கு வாய்ப்பு கொடுங்கள், நாட்டை வெட்டி, முறித்து, நிமிர்த்தி விடுகிறோம்” என, பத்திரிகைகள், டி.வி., பிரச்சார பீரங்கிகள் மூலம் பயங்கரமாக அலறும், BN . மேலும் 100 வெள்ளி BRIM உயர்த்தப்படும். பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசு குறைக்கப்படும். சீன நாட்டு பிரதமர், நம் நாட்டுக்கு வர்த்தக சுற்றுலா மேற்கொள்வார். இரண்டு புதிய தமிழ்ப் பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும். ‘வாங்கப்பட்ட’ சில எதிர்க்கட்சி தலைவர்களும்[தறுதலைகளும்] BN காரர்களோடு சேர்ந்து ‘லோ லோ என அலைவர்.’அறிவுக் களஞ்சியங்களான’ பெருவாரியான வாக்காளர்களும் BN னுக்கே வாக்களிப்பர். நான் சொல்வதில் ஏதேனும் தவறு இருப்பின், என்னை மானாவாரியாக விலாசுங்களேன், நண்பர்களே!
நாட்டில் எனன்னவோ நடக்குது . ஆனால் செம்பருதி எப்பொழுதும் பள்ளிக்கூடம் .கோவில் இவை இரண்டுக்கும் டான் முக்கியத்துவம்
கொடுக்கிறது. எபோளுடுமே பழைய செய்திகளையே கொடுக்கிறது . ஏன் இந்த தாமதம்? சுட சுட செய்திகள் தரமுடியாதா? அல்லது செம்பருத்தி ஒரு மலேசியா கினி மொழி பெயர்ப்பா?