தேசிய பாதுகாப்பு மன்ற(என்எஸ்சி)த்துக்கு விரிவான அதிகாரங்களை வழங்கும் புதுச் சட்டமொன்றை பிரதமர்துறை அமைச்சர் ஷகிடான் காசிம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இச்சட்டம், மக்களுக்கு, பிரதேசங்களுக்கு, முக்கிய கட்டுமானங்களுக்கு, பொருளாதாரத்துக்குத் தீங்கு நேரும் அபாயம் உண்டு என்று கருதும் எந்தவொரு பகுதியையும் பாதுகாப்புப் பகுதியாக பிரகடனம் செய்யும் அதிகாரத்தை என்எஸ்சி-க்கு வழங்குகிறது.
தேசிய பாதுகாப்பு மன்றச் சட்டம் 2015 என்று அழைக்கப்படும் இச்சட்டம் பாதுகாப்புப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் பாதுகாப்புப் படையினருக்குத் தனி அதிகாரங்களையும் கொடுக்கிறது.
இச்சட்டம் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் என்எஸ்சி-யை அரசாங்கத்தின் மத்திய ஆணையமாகவும் ஆக்குகிறது.
புதிய அவசரகால சட்டத்திற்கு தயாராகுங்கள்.
POCA, POTA, CPA, SOSMA முடிந்து இப்போது இன்னொரு பாதுகாப்பு சட்டமா?? யாருக்கு பாதுகாப்பு?? கொள்ளையனுக்கும் கொலைக்காரனுக்குமா அல்லது உண்மை உரிமைக்காக போராடும் மக்களுக்கா???