மசீச 76-வயது நிரம்பிய மலாக்கா மகளிர் பகுதி ஆலோசகர் கியான் சிட் ஹாரைக் கட்சியிலிருந்து நீக்கியது.
கியான் 1975-இல், மலாக்காவில் மசீச மகளிர் பகுதியை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“மற்ற கட்சிகளின் நடவடிக்கையில் பங்கேற்பது, செராமாக்களைச் செவிமடுப்பது. மற்ற கட்சித் தலைவர்களுடன் படமெடுத்துக்கொள்வது எல்லாம் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாம் நண்பர்களே என்பதைக் காண்பிக்கிறது.
“எனக்கு இதில் பிரச்னை இருப்பதாக தெரியவில்லை. ஆனால், கட்சி(மசீச) நான் அதன் விதிகளை மீறி விட்டதாக நினைத்து என்னை விலக்க முடிவு செய்துள்ளது”, என்று அவர் சீனா பிரஸ் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் கூறினார்.
இன்று காலை மசீச தலைமைச் செயலாளர் ஒங் கா சுவானிடமிருந்து கட்சிநீக்கம் செய்யப்படும் கடிதத்தை அவர் பெற்றார்
மனங்கள் மாறுவது , சிறந்தவற்றை தேர்வது எல்லாம் கற்காலத்தில் குற்றம் குற்றமே . முடிந்தவரை முட்டாளாகவே இரு. இதுவே கட்சிகளின் கோட்பாடு .
இது ஒரு கூதாடி கதைதான்
please join dap we வில் EXCEPT யு வித் both hAND your mca காட் நோ balls