கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ், கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்கான ஒருவழிப் பயணக் கட்டணத்தை ரிம35-இலிருந்து ரிம55 ஆக உயர்த்தியிருப்பதை ஒரு “பகல் கொள்ளை” என்று வருணித்த டிஏபி-இன் செர்டாங் எம்பி ஒங் கியான் மிங், அது எப்படி அனுமதிக்கப்பட்டது என்பதை போக்குவரத்து அமைச்சர் லியோங் தியோங் லாய் விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
கேஎல்ஐஏ2 விரிவாக்கப் பகுதி திறக்கப்பட்ட பின்னர் கேல்ஐஏ எக்ஸ்பிரஸில் பயணிகளின் எண்ணிக்கை 40 விழுக்காடு உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. அதனால்தான் 2014 இறுதியில் ஆறு புதிய ரயில் வண்டிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள் எண்ணிக்கை உயர்ந்ததால் கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸின் வருமானமும் அதிகரித்திருக்கும் என ஒங் கூறினார்.
கட்டண உயர்வால் கேஎல்ஐஏ-க்கும் கேஎல்ஐஏ2-க்கும் பயணம் செய்யும் பயணிகள் மட்டும் பாதிக்கப்படவில்லை புத்ரா ஜெயா/ சைபர் ஜெயா செல்வதற்கான கட்டணமும் ரிம9.50- இலிருந்து ரிம14 ஆக உயர்ந்துள்ளது என்றாரவர்.
பதில் வரும் என்று நினைகிரிர்களா ,அப்புடியே வந்தாலும் ……………………………ஐயோ ஐயோ …..ஐயோ
ஏன் இந்த கேள்வி UMNO உடனும் MCA உடனும் அல்லது MIC வராதா. கேவியஸ் அல்லது நல்ல இதை திரும்பி பார்க்க மாட்டர்களா????????????????????????????????????????????
எப்படி எல்லாம் பணத்தை கொள்ளை அடிக்க முடியுமோ அப்படி அடிக்கிறான்கள் –எல்லாம் அம்னோ மயம்
அப்படியே raja MIC ஆயுத்தை எடுத்து வந்து கிளிசிடுவானுங்க்களே ! அப்புறம் keyveas கதி பிட்சாண்டி கதிதான் mca அவன் மக்கள் காரையே அதிகம் பயன்படுத்துகிறார்கள் they DONT CARE