அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் 1946-இல் மலாயன் யூனியனுக்கு எதிராக மூண்டெழுந்த மலாய்க்காரர் எழிச்சியை நினைவுபடுத்தி (அதுவே அம்னோ தோன்றுவதற்கு வழிகோலியது) ஜோகூர் மலாய்க்கார்கள் ஒருபோதும் பின்வாங்குவதில்லை என்றார்.
அடுத்த வார அம்னோ பேரவையில் பேசுவதற்கு அவருக்குத் இடமளிக்காதது பற்றி பொதுமக்களின் பின்னூட்டத்தை அறிய முகநூலை நாடியுள்ள முகைதின் அதில் இட்டுள்ள பதிவில் இந்த உதாரணத்தைக் குறிப்பிட்டிருந்தார். கூடவே ஒரு படத்தையும் அவர் பதிவேற்றம் செய்திருந்தார்.
அது பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரி ஹோரோல்ட் மெக்மைக்கல் ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் அபு பக்காரைச் சந்திப்பதற்குச் சென்றபோது எடுக்கப்பட்ட படம். அதில், அவரைச் சுற்றிலும் மலாயன் யூனியன் எதிர்ப்பாளர்கள் கடல்போல் சூழ்ந்து நிற்கிறார்கள்.
“இப்படத்தில் மலாயன் யூனியனை எதிர்த்த ஜோகூரின் மலாய் மைந்தர்களைக் காணலாம். அவர்கள் நாடு அன்னியர் பிடியிலிருந்தும் குறுக்கீட்டிலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும் என்று நம்பியதால் மலாயன் யூனியனை எதிர்த்தார்கள்.
“ஜோகூர் மக்கள் நாட்டின் இறையாண்மையைக் காப்பதில் பின்வாங்குவதில்லை என்பதை வரலாறு நிரூபித்தது”, என்று முகைதின் குறிப்பிட்டிருந்தார்.
உன்னக்கு அல்வாதான் கொடுப்பான் நஜிப் !!!!!!! பிடித்கோ
ஆரம்பிச்சிடாங்கையா! ஆரம்பிச்சுட்டாங்க! அடுத்து அமீனோ தேர்தல் தள்ளிப் போடப் பட்டாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை அல்லது மீண்டும் ஒரு முறை N TEAM & M TEAM என்று பிரிந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த நாட்டில் அமீனோ அல்லலோ கல்லலோ பட்டால் நாடும் தத்தளிக்கின்றது போங்க.
மாநாடுக்கு சென்று வாருங்கள்.நிறைய அல்வா உங்களுக்காக தயார் செய்யபட்டுள்ளது,.