அம்னோவின் துணைத் தலைவர் முகைதின் யாசின் நாளை இரவு கம்போங் பாரு சுல்தான் சுலைமான் கிளப்பில் பேசவிருக்கிறார்.
அம்னோ இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற முகைதின் யாசினுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், அவரின் ஆதரவாளர்களுக்கு கம்போங் பாரு கூட்டம் ஓர் ஆறுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் காணப்பட்ட வதந்திகளைத் தொடர்ந்து முகைதினின் உதவியாளர் ஒருவர் அந்த நிகழ்ச்சி நாளை இரவு மணி 8.30க்கு நடைபெறும் என்பதை மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.
நாளை நடைபெறவிருக்கும் கம்போங் பாரு கூட்டத்தில் அம்னோவின் உதவித் தலைவர் ஷாப்பி அப்டால் உடனிருப்பார் என்று அவரின் உதவியாளர் தெரிவித்தார்.
முஹிடின் நேரம் பார்த்து சரியான இடத்தில் அடிக்கின்றார்.