அம்னோ பொதுப் பேரவையில் பேசிய பேராளர்கள், துணைத் தலைவர் முகைதின் யாசின் பேச முடியாமல் தடுக்கப்பட்டிருப்பது குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதாக அம்னோ மூத்த உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்சா கூறினார்.
“அவை நடவடிக்கைகளிலிருந்து அவர்(முகைதின்) ஒதுக்கப்பட்டிருப்பதைப் பேராளர்கள் நக்கல் செய்து பேசியதிலிருந்து அதை உணர முடிகிறது.
“பேராளர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதை அது தெளிவாகக் காண்பிக்கிறது”, என புத்ரா உலக வாணிக மையத்தில் தெங்கு ரசாலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இப்படி உட்கட்சிப் பூசல் இருந்தாலும் அம்னோ இன்னமும் ஒன்றுபட்டே இருக்கிறது என கூ லி என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் குவா மூசாங் எம்பி கூறினார்.
அட நீ வேறையா! அவன் அவன் நாலா பக்கமா காசே வாங்கிகிட்டு விழி பிதுங்கி போயி யாருக்கு கோவிந்த போடறதுன்னு திருட்டு முழி முழிக்கிறானுங்க…