சவூதி அராபிய தேர்தலில் முதல்முறையாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்

saudiசவூதி  அராபியாவில்  ஊராட்சி  மன்றங்களுக்கான  தேர்தல்கள்  நடந்து  முடிந்துள்ளன.

முதல்முறையாக  இத்தேர்தல்களில்  பெண்கள்   வாக்களிக்கவும்  வேட்பாளர்களாக  போட்டியிடவும்  அனுமதிக்கப்பட்டனர். 280  ஊராட்சி  மன்றங்களுக்குப்  போட்டியிட்ட  6,917  வேட்பாளர்களில்  979  பேர்  பெண்கள்.  அவர்களில்  15 பேர்  ஊராட்சி மன்ற  கவுன்சிலர்களாக  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.