அம்னோ ஆண்டுக் கூட்டத்துக்குப் பின்னர் கட்சியின் முழுக் கட்டுப்பாட்டையும் கைக்குள் வைத்திருப்பவராக விளங்குகிறார் பிரதமரும் கட்சித் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக். இது பற்றி அவரைப் பதவி இறக்குவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் டாக்டர் மகாதிர் முகம்மட்டிடம் கேட்டதற்கு அவர் கருத்துரைக்காமல் புன்னகைத்தார்.
திரும்பத் திரும்ப அவரிடம் கேட்டதற்கு, “அது பற்றி என் வலைப்பதிவில் எழுதுவேன். பிறகு”, என்றார்.