இஸ்மாயில் சப்ரி: பூமிபுத்ரா டிஜிட்டல் மையங்கள் நாடு முழுக்க திறக்கப்படும்

digiமாரா  டிஜிட்டல்  போன்ற  ஐடி  விற்பனை  மையங்கள்  நாடு  முழுவதிலும்  திறக்கப்படும்  எனக்  கிராம,  வட்டார  மேம்பாடு  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  கூறினார்.

மாரா  டிஜிட்டலின்  விரிவாக்கம்  மேலும்  பல  பூமிபுத்ரா  டிஜிட்டல்  விற்பனையாளர்கள்  உருவாவதற்கு வழிகோலும்  என்று  முகநூல்  பதிவில்  குறிப்பிட்ட  இஸ்மாயில்,   இதுகாறும்  அவர்கள்  அப்படிப்பட்ட  மையங்களில்   இடமளிக்கப்படாமல்  ஓரங்கட்டப்பட்டிருந்தார்கள்  என்றும்  கூறினார்.