விமான நிலைய வரி- இது பயணிச் சேவைக் கட்டணம் என்றும் அழைக்கப்படுகிறது- அதிகரிக்கப்படலாம் எனப் போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய் கூறியுள்ளார்.
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை விமான நிலைய வரியைப் பரிசீலிக்க மலேசிய விமான நிலைய ஹோலிடிங்ஸ் பெர்ஹாட்(எம்ஏஎச்பி) அரசாங்கத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் இடமளிக்கிறது என்றாரவர்.
“வரி அதிகரிப்பு நிகழலாம். ஒப்பந்தத்தில் அப்படித்தான் இருக்கிறது.
“அது பற்றி அறிவிப்பு செய்ய வேண்டும் என்பதில்லை. ஒப்பந்தத்தில் அப்படி இருக்கும்வரை எங்களால் முடிவை மாற்ற முடியாது”, என்று லியோ கூறியதாய் எஸ்ட்ரோ அவானி அறிவித்தது.
போங்கடா எல்லாமே வரி வரி என்ன ஆச்சி நமக்கு. சுமைக்கு மேல் சுமை மக்களுக்கு. பணகர்களுக்கு சுமை இருக்காது. ஏழைகளுக்கு சுமைதானே அரசாங்கம் சற்று பார்க்க வேண்டும்