சீனப் பெருநாளுக்குச் ‘சீனர்களுக்கு மட்டுமே’ விற்பனை உரிமத்துக்கு டிஏபி எதிர்ப்பு

tcnyகோலாலும்பூர்  மாநகரராண்மைக்  கழகம்,  சீனப்  புத்தாண்டு  விற்பனைக்கான   உரிமத்தைச்  சீனர்களுக்கு  மட்டுமே  கொடுக்க  உத்தேசித்திருப்பதை  டிஏபி  செராஸ்  நாடாளுமன்ற  உறுப்பினர்  டான்  கொக்  வாய்  எதிர்க்கிறார்.

நேற்று  மாநகராண்மைக்  கழகம்,  சீனப்  புத்தாண்டு  விற்பனைக்கான  தற்காலிக  கடைகளுக்கு  உரிமைகளுக்கு  விண்ணப்பிக்கலாம்  என்றும்  சீனர்களுக்கு  மட்டுமே  அவை  வழங்கப்படும்  என்றும் முகநூலில்  பதிவிட்டிருந்தது.

டான்,  புடுவில்  ஜாலான்  பசாரில்  235  ஸ்டால்  கடைகள்  இருப்பதாகவும்  அவற்றில்  பாதி  சீனர்களுடையது  மறுபாதி  சீனர்- அல்லாதாருக்குச்  சொந்தமானது  என்றும் கூறினார்.

“ஜாலான்  பசாரில்  பல்லினக்  கடைகளும்  பல்லின  வாடிக்கையாளர்களும்  உண்டு…..எனவே  டிபிகேஎல்  கூறுவதை   ஏற்றுக்கொள்ள முடியாது”, என ஜாலான்  பசாரில்  கடை  உரிமையாளர்களிடம்  பேசியபோது  அவர்  சொன்னார்.

“ஏற்றுக்கொண்டால்  இனவாத  கொள்கைக்கு  உதவியவர்களாவோம்”, என்றாரவர்.

சீனப்  புத்தாண்டாக   இருந்தாலும்  சரி, நோன்பு  மாதமாக  இருந்தாலும்  சரி,  தீபாவளியாக  இருந்தாலும்  சரி  எல்லா  இனத்தவரும்  தற்காலிகக்  கடைகளுக்கு  விண்ணப்பிக்கும்  தகுதி  பெற்றிருக்க  வேண்டும்  என்றும்  டான்  கேட்டுக்கொண்டார்.