அம்னோ-பாஸ் கூட்டணியை மஇகா எதிர்க்கவில்லை

 

 அம்னோ மற்றும் பாஸ் ஆகியவற்றுக்கிடையில் நிகழக்கூடிய நெருங்கிய உறவு தற்போதைய பிஎன் பங்காளித்துவக் கட்சிகளுக்கிடையிலான உறவைப் பாதிக்கக்கூடாது என்று மஇகா தலைவர் எஸ். சுப்ரமணியம் இன்று கூறினார்.

எனினும், தேர்தல் காலத்தில் அவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பை மஇகா எதிர்க்கவில்லை. இது முக்கியமானது என்றாரவர்.

இன்று கெப்போங்கில் செய்தியாளர்களிடம் இதனைக் கூறிய சுப்ரமணியம், பாஸ் கட்சியின் சில குறிப்பிட்ட கொள்களைகள் குறித்து மஇகா அதன் எதிர்ப்பை பிஎன் உச்சமன்ற கூட்டத்தில் தெரிவிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

பாஸ் கட்சியின் சில கொள்கைகளை மஇகா ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக பிஎன் உச்சமன்ற்ற கூட்டத்தில் தெரிவிப்போம் என்றாரவர்.

அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கிடையிலான உறவால் மஇகா பலனடையுமா என்ற கேள்விக்கு, அது குறித்து மேலும் ஆராய வேண்டியுள்ளது என்று பதில் அளித்தார்.