ஜனவரியில் ரோன்95 விலை 10-இலிருந்து 15 சென்வரை குறைந்து ஒரு லிட்டருக்கு ரிம1.80-க்கும் ரிம1.85-க்குமிடைப்பட்ட விலையில் விற்கப்படும் என பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி ஆருடம் கூறியுள்ளார்.
இக்கணிப்பு கச்சா எண்ணெயின் இப்போதைய விலையை அடிப்படையாகக் கொண்டது என்றவர் சொன்னார்.
ஆனாலும், இந்த விலைக் குறைப்பு உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியைப் பிரதிபலிக்கவில்லை என ரபிஸி குறிப்பிட்டார். எனவே, எண்ணெய் விலையை நிர்ணயிக்க புதிய முறை ஒன்று தேவை.
மலேசியாவில் ரோன்95-இன் விலை கடந்த ஆண்டு ஜூலையிலிருந்து ஏழு விழுக்காடு மட்டுமே குறைந்து லிட்டருக்கு ரிம1.95 என்ற விலையில் விற்கப்படுகிறது. ஆனால், அதே காலக்கட்டத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 66 விழுக்காடு குறைந்து யுஎஸ் $37 என்று ஆகியுள்ளது.
“டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு படுவீழ்ச்சி கண்டிருப்பதுதான் இவ்வளவு பெரிய வேறுபாட்டுக்குக் காரணமாகும்”, என்றாரவர்.