ஒபாமா பிப்ரவரியில் ஆசியான் தலைவர்களைச் சந்திப்பார்

 அமெரிக்க  அதிபர்  பராக்  ஒபாமா,  அடுத்த  ஆண்டு  பிப்ரவரி  15, 16ஆம் நாள்களில்  ஆசியான்  நாடுகளின்  தலைவர்களை   கலிபோர்னியாவின்   சன்னிலாண்ட்சில்  சந்திக்கிறார்.

இந்த அமெரிக்க- ஆசியான்  உச்சநிலை  மாநாடு  பற்றி  வெள்ளை மாளிகை  டிசம்பர்  30-இல் அறிவித்ததாக  வியட்நாம்  செய்தி  நிறுவனம்  கூறிற்று.

இப்படி  ஒரு  மாநாடு  இதற்குமுன்  நடந்ததில்லை  என்றும் கூறப்பட்டது.

“அந்த  உச்சநிலை  மாநாடு,   கோலாலும்பூரில்  ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட  புதிய  அமெரிக்க- ஆசியான்  பங்காளித்துவத்தின்கீழ்  அரசியல், பாதுகாப்பு,  பொருளாதார  விவகாரங்களில்  ஒத்துழைப்பை  மேலும்  வலுப்படுத்திக்  கொள்ள  வாய்ப்பாக  அமையும்”, என  வெள்ளை  மாளிகை  தெரிவித்தது.