தற்காப்புக் கொலை விவகாரத்தில் வழக்குரைஞர் மன்றம் மெளனம் சாதிப்பதை ஐஜிபி சாடினார்

தற்காப்புக்காக  என்றாலும்  ஒருவரைக்  கொல்வது  சரியல்ல  என்பதைப்  பொதுமக்களுக்கு  எடுத்துரைக்காத  வழகுரைஞர்  மன்றத்தையும்  மனித  உரிமை  வழக்குரைஞர்களையும்  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்   சாடினார்.

கொள்ளையன்  ஒருவனைக்  குத்திக்கொன்ற  ஒருவர்மீது கொலைக்குற்றம்  சாட்டப்பட்டிருப்பது  குறித்து  பொதுமக்கள்  தங்கள்  ஆத்திரத்தை  இணையத்தில்  பதிவு  செய்திருப்பது  குறித்து  கருத்துரைத்தபோது  அவர்  இவ்வாறு  சாடினார்.

“குற்றவியல்  சட்டம்  பிரிவு 99,  தற்காப்பின்  எல்லையைத்  தெளிவாக  வரையறுக்கிறது. பொதுமக்களுக்கு  மட்டுமல்ல  போலீசுக்கும்  அது  பொருந்தும்.

“ஒருவர்  நம்மைக்  கொள்ளையிட  வந்தால்  அவரைக்  கொல்லலாம்  என்பதில்லை.

“இந்த இடத்தில்தான் வழக்குரைஞர்  மன்றம்  மக்களுக்குக்  கல்வி  புகட்ட  வேண்டும்…..அது ஏன்  மெளனம்  சாதிக்கிறது?”, என்று  காலிட்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  வினவினார்.