
அரசியல் ஆதாயம் பெறுவதற்காக ஒருவர் முன்னாள் போலீஸ் அதிரடிப் படை வீரர் சிருல் அஸ்ஹார் ஒமாரைப் பேச வைக்க முயன்றதாக அவரின் வழக்குரைஞர் கமருல் ஹிஷாம் கமருடின் கூறினார்.
சிருல் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய தடுப்பு மையத்துக்கு தொலைபேசி வழி அழைத்து அவர் அம்முயற்சியை மேற்கொண்டாராம்.
அது தவிர, பலர் தடுப்பு மையத்துக்கு நேரடியாகச் சென்றும் அவரைப் பேச வைக்க முயன்றார்களாம்.
“அவர்கள் யார் என்பதை இப்போதைக்குச் சொல்ல இயலாது”, என்று குறிப்பிட்ட அவர், சரியான நேரத்தில் சட்டப்பூர்வமாக அதைத் தெரிவிக்கப் போவதாகக் கூறினார்.
சிருல், மங்கோலிய நாட்டவரான அல்டான்துன்யா ஷாரிபூவின் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்.
அவர், ஆஸ்திரேலியாவுக்குத் தப்பி ஓடினார். அங்கிருந்து அவரை நாட்டுக்குத் திருப்பி அழைத்துவர அரசாங்கம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
“அவருக்கு உதவுவதாகக் கூறி ஒரு சிலர் அவரை அணுகி வருகிறார்கள். ஒருவேளை அவர் பேசுவதை வைத்து அல்லது அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை அவர்(சிருலை)ப் பேச வைத்து அதன்வழி அரசியல் ஆதாயம் தேடுவது அவர்களின் நோக்கம் என்பது தெளிவு.
“அவரிடம் அவர்கள் ‘உங்கள் வழக்குரைஞரை விட்டொழியுங்கள், நாங்கள் உங்கள் பிரச்னையைத் தீர்த்து வைக்கிறோம்’ என்று கூறி யிருக்கிறார்கள்”, என்று கமருல் ஹிஷாம் கூறினார்.
கடந்த வாரம் சிருலைச் சந்தித்தபோது அவர் இதைத் தெரிவித்தாராம்.


























அல்தன்துயா ஆவி சும்மா விடுமா ?