முகைதின்: மக்களுக்கு அரசாங்கத்திடம் இன்னும் நம்பிக்கை வரவில்லை

new2015 மக்களுக்கு அரசாங்கத்தின்மீது நம்பிக்கை தளர்ந்த போயிருந்த நிலையில்தான் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.

அதனாலேயே  2016   சவால்மிக்க ஆண்டாக   விளங்கும்   என்கிறார்   முன்னாள் துணைப் பிரதமர்  முகைதின் யாசின்.

நிர்வாகத்தில் நேர்மையின்மை,  வெளிப்படைத்தன்மையின்மை   ஆகியவற்றின்  காரணமாக  2015 ஒரு மந்தமான ஆண்டாக அமைந்திருந்தது  என   முகைதின்   தம் புத்தாண்டுச் செய்தியில்   கூறினார்.

1எம்டிபி குழப்படிகள்,   பிரதமருக்குக் கொடுக்கப்பட்ட   ரிம2.6 பில்லியன் ‘நன்கொடை’,   முன்னாள் சட்டத்துறை  தலைவர்  பணிநீக்கம் செய்யப்பட்டது,   1எம்டிபி விசாரணையில்   ஈடுபட்டிருந்த   மலேசிய ஊழல் தடுப்பு   ஆணைய   அதிகாரிகள்   இடமாற்றம்   செய்யப்பட்டது முதலியவை   நிர்வாகத்தின்   நேர்மைமீது    சந்தேகம்  கொள்ள   வைத்தன   என்றாரவர்