புத்தாண்டில் அடியெடுத்து வைத்துள்ள காபோங்கான் கெத்துவா அம்னோ சாவாங்கான் மலேசியா, அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கின் பதவி விலகலுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுவதில் உறுதியாக உள்ளது.
அத்தரப்பு மக்களின் நலனுக்காகவும் நாட்டின் அரசியலுக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வரும் என அதன் பேச்சாளர் கமருல் அஸ்மான் அஸ்மான் ஹபிபுர் கூறினார்.
சுமார் 200 அம்னோ கிளைகளைக் கொண்ட அத்தரப்பு, நாட்டின் அரசியல் நிலவரத்தை மக்களுக்குத் தெளிபடுத்தும் பணியைத் தொடர்ந்து செய்து வரும்.
“தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவோம், மக்களுக்காக போராடுவோம். நாட்டின் அரசியல் நிலவரம் சமுதாயத்தை அழித்து விடாதபடி பாதுகாப்போம்.
“தோற்க மாட்டோம்”, என கமருல் சூளுரைத்தார்.

























