டுபாயில் நேற்றிரவு 63-மாடி கட்டிடத்தில் தீ பற்றிக் கொண்டது. ஆடம்பர தங்கும் விடுதியான Address Downtown Dubai hotel-லையும் குடியிறுப்பு வீடுகளையும் கொண்ட அக்கட்டடத்தில் பற்றிய தீ அக்கட்டிடத்தின் ஒரு பக்கமாக வேகமாக பரவி வானை நோக்கி விரைந்தது.
அதே நேரத்தில் அதற்கு எதிர்ப்புறத்தில் உள்ள 160-மாடி பூர்ஜ் கலிபா கோபுரத்தில் ஆயிரக்கணக்கானோர் குழுமி நின்று புத்தாண்டு வானவேடிக்கைகளை இரசித்துக் கொண்டிருந்தார்கள்.
தங்கு விடுதியில் இருந்தவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று இறங்கி ஓடுவதைத் தொலைக்காட்சிப் படங்கள் காண்பித்தன.
“பார்க்கும்போது ஏதோ ஒலிம்பிக் ஜோதிபோல் காட்சியளிக்கிறது. முதலில் யாரோ வாணங்கள் விடுகிறார்கள் என்றுதான் நினைத்தோம். இரண்டு நிமிடங்களில் மூன்றில் இரண்டு பங்கு கட்டடம் முழுக்க நெருப்பு பரவி விட்டது”, என பால் மிதுன் என்பார் கூறினார்.
தங்குவிடுதியில் இருந்த அனைவருமே வெளியேற்றப்பட்டு விட்டதாக டுபாய் அரசாங்கத்தின் ஊடக அதிகாரி தெரிவித்தார். ”14 பேர் மட்டுமே காயமடைந்தனர். அதுவும் சிறு காயங்கள்தான்”, என்றாரவர்.