சமூக மேம்பாட்டுத் துறை (கெமாஸ்) அதிகாரி ஒருவர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூருக்கும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லிச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
முகநூலில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அவர், ‘Sedar diri’ (உங்களை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்) என்று குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் அனைத்துலக வர்த்தக, தொழில் துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானையும் அவர் கிண்டலடித்திருந்தார்- அவர் “மடத்தனமாக ஜோக்கடிப்பதை” நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று.
அந்த அதிகாரிக்கு குவாந்தான் சமூக, மேம்பாட்டுத் துறை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
அதிகாரியின் முகநூல் பதிவு எதிர்மறையான தோற்றத்தை உண்டுபண்ணும் என்றும் அவரது பொறுப்பற்ற செயல், கெமாஸ், அரசாங்கம், சிவில் சேவை ஆகியவற்றின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை சொல்ல முடியவில்லை
KUMKI and singam அவனை plese சுட்டு தள்ளுங்கள் அவன் உன் மட தலைவனை ஏசிட்டான்