பாக்சைட் தோண்டி எடுப்பது மூன்று மாதம் நிறுத்தப்படுகிறது

bauxபாக்சைட்  மண்  எடுக்கும்  வேலைகளுக்கு  அரசாங்கம்  முற்றுப்பள்ளி  வைக்கவில்லை.

மாறாக,  மூன்று  மாதங்களுக்கு  நிறுத்தி  வைக்க  முடிவு  செய்திருப்பதாக  இயற்கை  வள,  சுற்றுச்சூழல்  அமைச்சர்  வான்  ஜுனாய்டி   துவாங்கு   ஜாப்பாரும்  பகாங்  மந்திரி  புசார்  அட்னான்  யாக்கூப்பும்  அறிவித்தனர். கையிருப்பைத்  தீர்ப்பதற்காக  மூன்று  மாதங்களுக்கு  பாக்சைட்  மண்  எடுப்பது  நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது.

இன்று  கோலாலும்பூரில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  பேசிய  வான்  ஜுனாய்டி,  முதல்  மாதத்தில் குவாந்தான்  துறைமுகத்தில்  உள்ள  பாக்சைட் கைருப்புகள்  ஏற்றுமதி  செய்யப்பட  வேண்டும்  அல்லது  வேறு  இடங்களுக்குக்  கொண்டு  செல்லப்பட  வேண்டும்  என்றார்.

இரண்டாவது  மாதம்  துறைமுகத்துக்கு  வெளியில்  உள்ள  கையிருப்புகளை  விற்றுத்  தீர்ப்பதில்  கவனம்  செலுத்தப்படும்.  மூன்றாவது  மாதத்தில்  சுற்றுசூழலுக்குப்  பாதிப்பு  நேராதபடி  பாக்சைட் தொழில்  செய்வதற்கு  ஒரு  கட்டமைப்பை  உருவாக்குவதற்குக்  கவனம்  செலுத்தப்படும்.