வட கொரிய அணுக்குண்டுச் சோதனைக்கு மலேசியா கண்டனம்

aman hநேற்று வடகொரியா  தரைக்கடியில் நடத்திய ஹைட்ரஜன் குண்டுச் சோதனைக்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அச்சோதனை  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு  மன்ற தீர்மானங்களுக்கு  எதிரானது  என்பதுடன்  உலகளாவிய  ஆயுதக்  களைவு  மற்றும்  ஆயுதப்  பரவல்   தடைக்கும்   பெரிய  பின்னடைவு  என  வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் குறிப்பிட்டுள்ளார்.

“இச்சம்பவம்  குறித்து  மலேசியா  மிகவும்  வருத்தம்  கொள்கிறது. இது  வட்டார  மற்றும்  உலக  அமைதிக்கும்  பாதுகாப்புக்கும்  மிகப்  பெரிய  மருட்டலாகும். உலகளவில்  ஆயுதக்  களைவை  மேற்கொள்ளும்  முயற்சிக்கும் இது தடையாகிறது”, என்றாரவர்.