போலீஸ் படையினர் உடலைக் கட்டு செட்டாக வைத்துக்கொள்ள முன்னோடித் திட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளது.
“Trim N Fit” என்று பெயரிடப்பட்டிருக்கும் அத்திட்டம் நேற்று தொடங்கியது. போலீஸ் நிர்வாகத் துறையிலிருந்து “கொழுகொழு”வென்றிருக்கும் 33 அதிகாரிகள் அத்திட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
போலீஸ் அதிகாரிகள் உடல் பருமனாக இருந்தால் அவர்களுக்குப் பணி உயர்வு கிடைக்காமல் போகலாம் பதவியில் நிரந்தரமாக்கப்படாமலும் போகலாம் என புக்கிட் அமான் நிர்வாகத் துறை இயக்குனர் சுல்கிப்ளி அப்துல்லா கூறியதாக த ஸ்டார் ஆன்லைன் அறிவித்துள்ளது.
“போலீஸ் படையினர் பணியில் இருக்கும் காலத்தில் திடமாக இருப்பதை உறுதிப்படுத்தும் ஒரு முன்னோடித் திட்டம் இது. சட்டத்தை அமல்படுத்துவதும் பொது ஒழுங்கைக் காப்பதுமே எங்களின் முக்கிய பணி. அதற்கு எங்கள் ஆள்கள் எப்போதும் திடமாக இருப்பது அவசியம்”, என்றாரவர்.
லஞ்சம் வாங்குவது குறைந்தால், கொழுப்பு தானாக குறைந்துவிடும். புக்கிட் அமான் அதிகாரிக்கு இது கூட தெரியாதா? நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா?
எனக்கு தெரிந்து இவர்கள் திருடனை பிடிக்கிறார்களோ இல்லையோ ஆனால் அந்நிய நாட்டவர்களை துரத்தி துரத்தி பிடிக்கிறார்கள் பிறகு அவர்களை சந்துக்குள் கூட்டி கொண்டு போகிறார்கள் பிறகு விடுகின்றனர் சந்துக்குள் என்ன நடக்கிறது என்று தான் தெரிய வில்லை
இவர்கள் இந்த விசயத்தில் தோல்விதான் அடைவர் லஞ்சம் சாப்பிடவும் நல்ல அரசியல்வாதிகளை பிடித்து ஜெயிலில் அடைத்து நாட்டு தலைவனிடம் கிம்பளம் வாங்குவதில் நம் polis no 1