பல்கலைக்கழகங்கள் அங்கு பயிலும் மாணவர்களுக்குப் பகுதி-நேர வேலைகளைக் கொடுக்கலாம்

aslamபல்கலைக்கழக  மாணவர்கள்  உயர்ந்துவரும்  வாழ்க்கைச்  செலவினத்தைச்  சமாளிக்க அந்த  உயர்க்  கல்விக்  கழகங்களே  அவர்களுக்குப்   பகுதி-நேர  வேலைகளை   வழங்கலாம்.

இப்படி  ஒரு  ஆலோசனையை  முன்வைத்துள்ள  யுனிவர்சிடி  இஸ்லாம்  அந்தாராபங்சா   விரிவிரையாளர்  பேராசிரியர்    முகம்மட்  அஸ்லாம்  ஹனிப்,  நிர்வாகம்,  கூட்டுறவு,  நூலகப்  பிரிவுகளில்  இப்படிப்பட்ட  வேலைகள்  கிடைப்பதாகக்  கூறினார்.

“இங்கு  கிடைக்கும்  பகுதி-நேர  வேலைகளை  உதவி  தேவைப்படும்  மாணவர்களுக்கு  வழங்கலாம். அதில்  கிடைக்கும்  வருமானம்  செலவின்  ஒரு  பகுதியைச்  சரிக்கட்ட  அவர்களுக்கு  உதவும். இதனால்  வெளியாரை  வேலைக்குத்  தேர்ந்தெடுக்க  வேண்டிய  தேவையும்  குறையும்”, என்று  அஸ்லாம்  பெர்னாமாவிடம்  தெரிவித்தார்.