பசிபிக்- மண்டல பங்காளித்துவ ஒப்பந்தத்தால்(டிபிபிஏ) பெரிதும் பயனடையும் நாடுகளில் மலேசியாவும் ஒன்றாக இருக்கும் என வால் ஸ்திரிட் ஜர்னல் (WSJ) கூறியுள்ளது.
“அந்த ஒப்பந்தத்தில் சேராத இப்பகுதியில் உள்ள போட்டி நாடுகளுடன் ஒப்பிட்டால் மலேசியப் பொருளாதாரம் 8% அதிகரிக்கும்”, என்று அது கூறிற்று.
டிபிபிஏ, உறுப்பு நாடுகளிலும் உறுப்பினரல்லாத நாடுகளிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மீது உலக வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கை அவ்வாறு கூறுவதாக WSJ சொல்லிற்று.
அந்த வணிக ஒப்பந்தத்தால் மலேசியாவின் ஏற்றுமதியை 20 விழுக்காடு அதிகரிக்கும் என்றும் உலக வங்கி ஆருடம் கூறியுள்ளது.
உண்மையே dap சொல்வது சரி