சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி, 1எம்டிபி விசாரணைகளில் குறுக்கீடும் கிடையாது என்பதை இன்று மீண்டும் வலியுறுத்தினார்.
விசாரணைகளில் தலையீடு நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுவது குறித்து வழக்குரைஞர் மன்றத் தலைவர் திரு கவலை தெரிவித்திருப்பது பற்றி வினவியதற்கு அதற்கு ஆதாரமில்லை என்று அபாண்டி கூறினார்.
“தவறான தகவல்களின் அடிப்படையில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது. முதற்கண், 1எம்டிபி விசாரணைகளில் எந்தக் குறுக்கீடும் இல்லை”, என்றாரவர்.
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்துக்கு போலீஸ் சென்றது என்றால், தகவல் கசிவு பற்றி புகார் வந்ததை அடுத்து விசாரிக்கச் சென்றதே தவிர, எம்ஏசிசி-இன் விசாரணையைத் தடுப்பதற்காக அல்ல என்று அபாண்டி வலியுறுத்தினார்.
இதைக் குறுக்கீடு என்று யாரும் பொருள் கொண்டு விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்..
1MDB விசாரணை ஆவணங்கள் பொது கணக்குக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். வெளிப்படையான விசாரணையாக இருத்தல் வேண்டும். நடக்குமா?? ஏற்கனவே மத்திய வங்கி விசாரணை என்னவானது என்று மக்களுக்குத் தெரியும். தொழில்நுட்ப காரணத்தைக் காட்டி புறக்கணிப்பது இந்நாட்டில் புதியதல்லவே!! மத்திய வங்கி விசாரணை ஆவணங்களையும் முடிவினையும் பரிந்துரைகளையும் பொது கணக்குக் குழுவிடம் வெளிப்படையாகவே ஒப்படைக்கலாமல்லவா?? முழு பூசணிக்காயை சோற்றில் மூடி மறைப்பது இந்நாட்டில் ஆளும் அரசுக்கு கைவந்த கலையே என்று மக்கள் எண்ணத்தில் நிழலாடுகிறது!!!
போடா உன் பேச்சை உன் பல மனைவிமார்களே நம்ப மாட்டங்க மக்கள் உன்னை காரி உமில்வதைதான் பல இடங்களில் காண முடிகிறது
இந்த வசனத்தை ஏற்கனவே பலர் பேசிவிட்டார்களே ஏஜி, புதிதாக ஏதேனும் வசனம் ,,,,,,,? இல்லையா ?