சுமார் மூன்று வாரங்களுக்குமுன் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடியின் மகள் வீடு கொள்ளையிடப்பட்டது. நேற்று அவரின் மெய்க்காவலர் வீடு.
வெட்டுக் கத்திகள் ஏந்திய கொள்ளையர் கும்பல் ஒன்று, நேற்று காலை மணி 9.30க்கு பண்டார் புக்கிட் மக்கோத்தா-வில் உள்ள துணைப் பிரதமரின் மெய்க்காவலரான ஒரு போலீஸ் அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்ததாக த சன் இணையத்தளம் கூறிற்று.
போலீஸ் அதிகாரி அப்போது வீட்டில் இல்லை. கொள்ளையர்கள் கத்தியைக் காண்பித்து மனைவி, பிள்ளைகளை மிரட்டி பணம், மின்பொருள்கள், நகைகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
யாருடைய வீடு என்பதைத் தெரிந்தே கொள்ளையிட்டிருக்கிறார்கள். அந்த அதிகாரியின் ஆயுதம் எங்கே என்று கேட்டிருக்கிறார்கள். அவர் அப்போது கடமையில் இருந்ததால் கையோடு எடுத்துச் சென்று விட்டார். அதனால் அது அவர்களிடம் சிக்கவில்லை.
உள்துறை அமைச்சரின் மகள் வீட்டில் கொள்ளை.தற்போது அவரின் மெய்க்காவலர் வீட்டில் கொள்ளை.அடுத்து உள்துறை அமைச்சரின் வீட்டில்தான் கொள்ளையர்கள் கைவரிசையை காண்பிப்பார்கள் போலும்.மலேசிநா மிகுந்த பாதுகாப்பான நாடு என்பதில் ஐயமில்லை.காவல்துறையின் கடமையுணர்வும் செயல்பாடுகளும் போற்றத்தக்கது.
நாட்டில இது ரொம்ப முக்கியம்.
இவன் வீட்டிலும் நுழையுங்கள் உங்களை மக்கள் ஆதரிப்பார்கல் ஏனென்றால் UMNO வில் திருடனுங்கதான் அதிகம்
மிகவும் பாதுகாப்பான நாட்டில் வாழ்கிறோம் என்று பெருமிதம் கொள்வோம் !
உள்துறை அமைச்சரின் உறவினர் மற்றும் சகாக்கள் வீட்டில் கொள்ளை ! ஆகா கொள்ளையர்களின் திறமையோ திறமை !
எப்பொழுதும் விரலை நீட்டி பேசும் உள்துறை அமைச்சர் அவ்விரலை தனது வாயிக்குள்ளையே திணித்து விடுவார்கள் கொள்ளையர்கள் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார்.
கொள்ளையர்களிலும் நல்லவர்கள் இருப்பபார்கள் போல் தெரிகிறதே !!!