உலகப் பொருளாதாரம் சுணக்கமடைந்துள்ள இவ்வேளையில் மலேசியா வலிவாற்றலுடன் விளங்கத் தவறியதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா.
எண்ணெய் விலை உயர்ந்தும் உலகளவில் வட்டி விகிதங்கள் குறைந்துமிருந்த ஆண்டுகளில் மலேசியாவுக்கு அளவில்லா ஆதாயம் கிடைத்தது.
“அவரது (நஜிப்) ஆட்சியில், எண்ணெய் பீய்பாய்க்கு 100 டாலருக்குமேல் விற்ற காலத்தில் கிடைத்த அந்த மிகை வருமானமெல்லாம் என்னவாயிற்று?”, என்றவர் வினவினார்..
எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும் காலத்தில் அல்லது உலகப் பொருளாதாரம் சுனக்கம் அடையும் காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைச் சமாளிக்க, அன்று எண்ணெய் விலை உயர்ந்திருந்த காலத்தில் குவிந்த ஆதாயத்தைச் சேமித்து வைத்திருக்க வேண்டும் அல்லது முதலீடு செய்திருக்க வேண்டும் என்று புவா ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
நாடு சவால்மிக்க பொருளாதார நிலவரத்தை எதிர்நோக்கும் என நஜிப்பே ஒப்புக்கொண்டிருப்பது அவரது அரசாங்கத்தின் உருமாற்றத் திட்டமும் (ஜிடிபி) பொருளாதார உருமாற்றத் திட்டமும் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை என்பதைக் காட்டுகிறது.
“நாம் அனைத்துலக எண்ணெய் விலையையும் அமெரிக்காவின் வட்டி விகிதத்தையும் நம்பி இருக்கிறோம் என்று அவரே (நஜிப்) ஒப்புக்கொண்டிருப்பது, அவரது ஆட்சியில் நாடு அடைந்த மிதமான முன்னேற்றத்துக்கூட உயர்ந்த எண்ணெய் விலைகளும் மிகக் குறைவாக இருந்த உலக வட்டி விகிதங்களும்தான் காரணமே தவிர அவரது பொருளாதார மேலாண்மை காரணம் அல்ல என்பதை நிரூபிக்கிறது”, என்று புவா குறிப்பிட்டார்.
ஐயா புவா அவர்களே எக்காலத்தில் இந்த நாதாரிகள் எதற்கும் பொறுப்பு ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்? ஒன்றும் நடக்காது. காரணம் பெரும்பாலான மலாய்க்காரன் களுக்கு அக்கறை கிடையாது. ஏனெனில் அதிகாரம் அவன்கள் கையில் இருப்பதினால்-அத்துடன் மலாய்க்காரன் அல்லாதவர்களை எதிரிகளாகலாக்கி குளிர் காய்ந்து கொண்டிருப்பதினால்– எனக்கு நம்பிக்கை கிடையாது– அதிலும் இவன்களின் மதபித்து எல்லாரும் அறிந்ததே– பகுத்தறிவுக்கு அங்கு இடமில்லை.சமத்துவத்துக்கும் இடமில்லை. நம்மை அடிமைகளாக வைத்திருக்கவே இவ்வளவும். எல்லாம் MIC -MCA கம்மனாட்டிகளினால் வந்த வினை.