மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), சட்டவிரோத பாக்சைட் நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பு வழங்கிவந்த பகாங் நில, சுரங்கத் துறை(பிடிஜி) அதிகாரிகள் இருவரை இன்று நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்றது.
பிடிஜி உதவி இயக்குனர்(அமலாக்கம்) சைட் உமர் கலைல் சைட் காலிட், 34, நில உதவி அதிகாரி (அமலாக்கம்) பாட்லி அப்துல் மாலெக், 35 ஆகிய அவ்விருவர்மீதும் இன்று காலை குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கையூட்டு பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அனுருல் ஹிராஹ் அபு பக்கார் என்பாரிடமிருந்து அவரது பாக்சைட் சுரங்க நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பளிப்பதற்குக் கைம்மாறாக பாட்லி ரிம30,000 கையூட்டு பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
சைட் உமர் அதற்கு உடந்தை என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
“வெல்லம் தின்கிரவனை விட்டுட்டு விரல் சூப்புரவனை” நீதிமன்றத்தில் நிறுத்துவதில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்துக்கு நிகர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமே !!!