தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியின் நிருமாணிப்பு செலவு குறித்த அறிவிப்பு ஏதோ கேட்கச் சொல்கிறது!

IMG-20160112-WA0061

கிள்ளான், தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியின் கட்டடம் எழுப்புவதற்கான வேலைகள் தொடங்கி விட்டன. அதற்கான செலவு எவ்வளவு ஆகும்? கல்வி அமைச்சு அக்கட்டடம் கட்டுவதற்கான செலவு எவ்வளவு ஆகும் என்பதை நிச்சயமாக நிருணயித்திருக்க வேண்டும்.

ஆனால், தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியின் நிருமாணிப்புக்கு ஆகப்போகும் செலவு குறித்து வெவ்வேறான அறிவிப்புகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

முதலில், 24 வகுப்பறைகளைக் கொண்ட கட்டடத்திற்கு ரிம24 மில்லியன் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவதாக, அதே 24 வகுப்பறைகளைக் கொண்ட கட்டடத்திற்கு ரிம25 மில்லியன் ஆகும் என்றனர்.

மூன்றாவதாக, கடந்த வாரம் கல்வி அமைச்சின் துணை அமைச்சர் பி. கமலநாதன் அப்பள்ளிக்குச் சென்றார். 24 வகுப்பறைகளைக் கொண்ட கட்டடத்திற்கு ரிம20 மில்லியன் ஆகும் என்றார்.

அடுத்து, மூன்று நாள்களுக்கு முன்னர் வந்தார், சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம். மேற்கூறப்பட்ட கட்டட வேலைக்கு ரிம27 மில்லியன் ஆகும் என்று தெரிவித்தார்.

இதன் அர்த்தம் என்னவாக இருக்கும்?