தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன் ஹொல்டிங்ஸ் பெர்ஹாட், பிப்ரவரியில் சீனப் புத்தாண்டுக்குப் பின்னர் அதன் கார் விலைகள் உயரும் என அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உபரி பாகங்களின் விலை உயர்ந்து வருவதுதான் இதற்குக் காரணம்.
“ஓராண்டுக்குமுன் இருந்ததைவிட ரிங்கிட் மதிப்பு குறைந்திருக்கிறது. இதனால் நாங்கள் இறக்குமதி செய்யும் பகுதிகளின் விலை பாதிக்கப்பட்டிருக்கிறது”, எனத் தலைமை செயல் அதிகாரி ஹரித் அப்துல்லா கூறினார்.
தன் வாடிக்கையாளர்கள் புத்தம்புது காரை நடப்பு விலையிலேயே வாங்கி புத்தாண்டைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே புரோட்டோன் சீனப் புத்தாண்டு வரை விலை உயர்வைப் பிடித்து வைத்திருப்பதாக ஹரித் தெரிவித்தார்.
ஹொண்டா மலேசியா அதன் கார் விலைகளை 2-3 விழுக்காடு உயர்த்தியுள்ளது. யுஎம்டபிள்யு தோயோட்டா மோட்டோர்ஸ் அதன் கார்களின் விலைகளும் 4-இலிருந்து 16 விழுக்காடுவரை உயரும் என அறிவித்துள்ளது.