இந்த 21-ஆம் நூற்றாண்டில், பொங்கல் பெருநாள் மனித குலத்திற்கு அதிமுக்கியமாக விளங்கும் உணவு மற்றும் இயற்கையைp பாதுகாக்கும் கடமையை நினைவூட்டும் ஒன்றாக அமைய வேண்டும்.
நமது முன்னோர்கள் இந்த பொங்கலைக் கொண்டாடும் பொழுது, இயற்கை வளங்கக் காத்து அதன் அவசியத்தையும் அர்த்தத்தையும் உணர்ந்து கொண்டாடினர். இதுவே, மனிதனின் உணவுக்கு உத்தரவாதமாக அமைந்தது.
ஆனால், இன்று முதலாளித்துவ நவீன காலத்தில், மனிதர்கள் இயற்கையை அழிக்கின்றனர்; இலாபத்திற்காக உணவு வளங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. நிலங்கள் மேம்பாட்டிற்கு பறிக்கப்பட்டு, விவசாயம் பாழ்படுகிறது. இப்போது மக்கள் பதப்படுத்தப்பட்ட மற்றும் செயற்கை முறையிலான உணவுகளை உட்கொள்கின்றனர். இதுதான் பல்வகை தீரா நோய்களுக்கு வழிவகுக்கிறது.
பொங்கல், இலாபத்திற்கான பொருளாதாரத்தை முன்வைக்காமல், இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு முக்கிய செய்தியை மக்களுக்கு கொண்டு செல்வதாலே சோசியலிசவாதிகள் பொங்கலை போற்றுகின்றனர். ஒரு தரப்பினர் மட்டுமே இலாபம் அடையும், சொத்துக்கள் குவிக்கும் பொருளாதார முறையை சோசியலிசவாதிகள் எதிர்க்கின்றனர். இதை எதிர்த்தே சோசியலிசவாதிகளின் வர்கப் போராட்டம் தொடர்கிறது.
இலாபத்திற்கு மட்டுமே முன்னுறிமை வழங்கும் பொருளாதாரம் மற்றும் அரசியல் தொடர்ந்தால் நமது விவசாயத்துறை தற்கொலை செய்யும்; உணவு பாதுகாப்பு அழிந்துவிடும். ஆக, வாருங்கள் நாம் அனைவரும் பொங்கல் பெருநாளை அதன் உண்மையான நோக்கத்தை உணர்ந்து கொண்டாடுவோம்.
பொங்கல் ஒரு பெருநாள் மட்டுமல்ல, அது மனிதனின் பேராசையை எதிர்த்து போராட தூண்டும் ஒரு விழாவாகும். இந்தப் போராட்ட சிந்தனையோடு நாம் பொங்கலை கொண்டாடுவோம்.
வாழ்க போராட்டம்! வாழ்க பொங்கல்!
எ. சிவராஜன், பி.எஸ்.எம் பொதுச்செயலாளர்
உலகவாழ் தமிழர்கள் அனைவருக்கும் எமது இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல்.
தம்பி சிவராஜா! பொங்கலை எப்படித்தான் கொண்டாடவேண்டும் என்பதை சொல்ல மறந்துவிட்டீரே!
செம்பருத்தி எங்களுக்கெல்லாம் பொங்கல் புத்தாண்டு வாழ்த்து ச்சொல்லவில்லையே .அதன் ஆசிரியர் க.ஆறுமுகம் .ஆசிரியர் குழுவினர்களுக்கும் பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
எல்லா பொங்கல் கொண்டாடுபவர்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
50-களில் தமிழர் திருநாள் என்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆனால் இன்று அப்படியல்ல —
நாம் பொங்கலை முன்புபோல் கொண்டாட வேண்டும்.
பி.எஸ்.எம் தோழர்களுக்கும் எமது தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்:)
தமிழர்கள் அனைவருக்கும் எமது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ..
இந்த இனிய நன்னாளில் வாழ்ந்துகெட்ட தமிழினம் மீண்டும் தலைநிமிர்ந்து தன்மானத்தோடு வாழ இனவுணர்வும் மொழியுணர்வும் மேலோங்கிட இந்த நன்னாளில் உறுதிகொள்வோம் நாம் தமிழராக 🙂
தமிழர் எழுச்சிப்பாறை! நம் நாட்டு தமிழினம் உருப்படவே உருப்படாது. தன்னை யொத்த சமமான பிரஜை ஒருவனை ‘நாட்டுக்காரன்’ என்கிறான் இந்த சொரணை கெட்ட, கேடுகெட்ட, ‘காட்டுக்கார’ தமிழன்.
காட்டில் இருக்கிற மிருகமில்லாம் நாட்டுக்குல்லாரவந்தா நாட்டுக்கார தமிழனும் காட்டுகாரனாகிவிடுவான்யா ..என்ன செய்கிறது எல்லாம் நேரம்