புத்ரா ஜெயா, இணையச் செய்தித் தளங்களை வாங்குவதற்கும் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் முயல்வதாக மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின் கூறுகிறார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஊடகப் பிரச்சாரங்களைக் கவனித்துக்கொள்பவர்தான் இந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார் என இணையச் செய்தித் தளம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் முன்னாள் தலைமைச் செய்தியாசிரியர் கூறினார்.
அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.
“அவர் (பிரச்சாரத் தலைவர்) வெளிநாட்டுக்குத் தப்பியோடிய ‘கூலி’ எழுத்தாளருடன் கைகோத்து மலேசியாகினி, மலேசியன் இன்சைடர், ஃபிரி மலேசியா டூடே போன்ற சுதந்திரமாக செயல்பட்டுவரும் செய்தித் தளங்களை விலைக்கு வாங்கவும் கட்டுப்படுத்தவும் முயன்று வருவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
“இது மக்களின் ஆதரவைப் பெற நஜிப் முகாம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்பின் ஒரு பகுதி என அந்தச் செய்தித் தள உரிமையாளர் தெரிவித்தார்”, என காடிர் தம் வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
வளைத்துப் போட்டால் என்ன? புதியதாக இன்னொரு வலையத் தளத்தை ஏற்படுத்திக் கொண்டால் போகுது.
மூத்த பத்திரிக்கையாளர் காதிர் ஜாசின், துணிந்து பல விஷயங்களை வெளியிடுகிறார். பாவம்! இன்னும் எத்தனை நாளைக்கோ தெரியவில்லை.