கெடாவில் எதிரணி புதிய அரசை அமைக்கும் வாய்ப்புள்ளது: ஆய்வாளர்

sdkongகெடா  மாநிலத்தில்  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிரை  வெளியேற்ற  ஒருங்கிணைத்த  முயற்சி  மேற்கொள்ளப்பட்டு  வருவதால்   அங்கு  எதிரணி  புதிய  அரசாங்கத்தை  அமைக்கும்  வாய்ப்பு  இருப்பதாகக் கருதுகிறார்  அரசியல்  ஆய்வாளர்  ஒருவர்.

அம்னோ  சட்டமன்ற  உறுப்பினர்களில்  நால்வர்  அல்லது  ஐவர்  ஆதரவு   கொடுத்தால்  போதும்  எதிரணி  ஒரு  சிறு  பெரும்பான்மையில்  புதிய  அரசாங்கத்தை  அமைத்து விடலாம்  என  யுனிவர்சிடி  உத்தாரா (யுயுஎம்) விரிவுரையாளர்  அஸிஸுடின்  முகம்மட்  சனி  கூறினார்.

கெடா  சட்டமன்றத்தில்  பிஎன்னுக்கு  21 இடங்கள்,  எதிரணிக்கு  15 இடங்கள்.

முக்ரிசுக்கு  எதிரணியினர்  ஆதரவு  இருந்தால்கூட  அவரால்  தொடர்ந்து  மந்திரி  புசாராக  இருக்க  முடியும்.

ஆனால்,  பிஎன்  சட்டமன்ற  உறுப்பினர்களில்  எத்தனை  பேர்  முக்ரிசை  ஆதரிக்கிறார்கள்  என்று  தெரியவில்லை.

“முக்ரிசை  மந்திரி  புசார்  பதவியிலிருந்து  அகற்ற  19 சட்டமன்ற  உறுப்பினர்கள்  அவரை  நிராகரிக்க  வேண்டும்”, என  அஸிஸுடின்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“அதே  வேளை  நான்கு  அல்லது  ஐந்து  அம்னோ  சட்டமன்ற  உறுப்பினர்கள்  எதிரணியினருடன்  சேர்ந்து  முக்ரிசுக்கு  ஆதரவு  தெரிவித்தால்  அவர்  தொடர்ந்து  மந்திரி  புசாராக  இருப்பது  சாத்தியமே”, என்றாரவர்.