பொருளாதார சுணக்கத்திலும் சுகாதாரச் சுற்றுப் பயணம் வளர்ச்சி கண்டது

healபொருளாதாரச்  சுணக்கம்  ஏற்பட்டிருந்தாலும்  அது  சுகாதாரச்  சுற்றுப்பயணிகளின்  வருகையைப்  பாதிக்கவில்லை  என்று  சுகாதார  அமைச்சர்  டாக்டர்   எஸ்.சுப்ரமணியம்  கூறினார்.

மலேசியாவில்  சுகாதாரச்  சுற்றுப்பயணத் துறை  தொடர்ந்து  வளர்ச்சி  கண்டு  வருவதாகவும்  2014-இல் 800,000  சுற்றுப்பயணிகள்  மருத்துவ  சிகிச்சை  நாடி   வந்தார்கள்  என்பதை  மலேசிய  சுகாதாரச்  சுற்றுலா  மன்ற (எம்எச்டிசி)  அறிக்கை  காண்பிப்பதாகவும்  சுப்ரமணியம்  தெரிவித்தார்.

2015-இலும்  சுகாதாரச்  சுற்றுப்பயணிகளின்  எண்ணிக்கை  அதிகரித்தது  என்று கூறிய  அமைச்சர்  அந்த  ஆண்டின் புள்ளிவிவரங்கள்  மார்ச்  மாதம்தான்  கிடைக்கும்  என்றார்.