ஜேபிஎ எனப்படும் அரசாங்க உபகாரச் சம்பளம் நிறுத்தப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் வீ கா சியோங் அறிவித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என்கிறார் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன்.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் இது வரையில் வெளிநாடுகளிலும் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் பயிலுவதற்காக கொடுத்து வந்த இந்த நிதியை திடீரென்று நிறுத்துவது கொடுமையானது என்று வர்ணித்த குலா, தங்கள் கனவு நிறைவேற கடின உழைப்பைப் போட்டு காத்திருந்த மாணவர்களுக்கு அது கை கூடி வரும் வேளையில் பேரிடியாக இந்த செய்தி வந்துள்ளது என்றார்.
அதுவும் எந்த முன்னறிவிப்புமின்றி டாக்டர் வீ கா சியோங் அமைச்சரவையில் எழுப்பிய கேள்விக்கு இது பதிலாக மட்டுமே தெரிவிக்கப்பட்டது. இது இந்த அரசாங்கம் வெளிப்படையான போக்கை கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவாகாக் காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
700 பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும் வேளையில், அதில் இந்திய மாணவர்கள் ஒரு 140 பேர் ஆகிலும் இருந்திருக்க வாய்ப்புண்டு என்று குறிப்பிட்ட குலா, மாரா உபகாரச் சம்பளங்களில் மாற்றம் ஒன்றும் கிடையாது என்பதைச் சுட்டிக் காட்டி இந்த ஜேபிஏ உபகாரச் சம்பளத்தில் மட்டும் கையை வைப்பது நியாமானதல்ல என்றார்.
“இந்த வேளையில் ம.இ.காவின் இளைஞர் பிரிவின் தலைவர் சிவராஜுக்கு நான் நன்றி சொல்லகடமைப்பட்டுள்ளேன். மாணவ்ர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்தச் சிரமத்தை போக்க அரசாங்கம் இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருப்பது வரவேற்கக் கூடியது. ம.சீ.ச சார்பில் வீ கா சியோங் பேசிவிட்டார், ம.இ.கா சார்வில் அதன் இளைஞர் பிரிவின் தலைவர் பேசிவிட்டால் மட்டும் போதுமா?”, என்று அவர் வினவினார்.
ஏன் சுப்ரா மௌனம் காக்கிறார்?
“ம.இ.காவின் தேசியத் தலைவராகவும், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரே இந்தியப் பிரதிநிதியாகவும் இருக்கும் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் ஏன் மௌனமாக இருக்கின்றார்?” என்று கேள்வி எழுப்பிய குலா, வீ கா சியோங் அமைச்சரைவையில் இது பற்றி கேள்வி எழுப்பிய போது ம.இ.க தலைவரின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்று தெரியவில்லை!
“இந்த உபகாரச் சம்பளத்தினால் அதிகமாக பாதிப்படைவோர் நம் இன மக்கள் என்று தெரிந்தும் இவர் வாளாவிருப்பது இதன் தாக்கத்தை அவர் அறிந்திராமல் இருக்கின்றார் என்று கொள்ளலாமா?
“ஏழை இந்திய மாணவர்களின் எதிர்கால இலட்சியங்களைத் தவிடுபொடியாக்கிவிட்ட இந்த உபபகாரச் சம்பள நிறுத்தம் ம.இ.கா தலைவருக்கு பெரிய பொருட்டாக தெரியவில்லையோ?
“வேறு எந்த ஒரு வாய்ப்பும் வழங்கப்படாத நிலையில், ஜேபிஎ உபகாரச் சம்பளத்தையே நம்பியிருந்த இந்தமாணவர்கள் நிலை குறித்து அவர் ஏன் அமைச்சரவையில் பேசவில்லை?
“மாணவர்களின் கண்ணீர், படிப்பில் அந்த உச்சத்தை எட்ட அவர்கள் போட்ட உழைப்பு , அதற்காக அவர்களின் பெற்றோர்கள் பட்டத் துன்பங்கள் ஆகியவற்றை எல்லாம் உணர்ந்திருக்கும் ஒரு தலைவராக டாக்டர் சுப்ரமணியம் இருந்திருந்தால், வீ கா சியோங்கிற்கு முன்னதாக இந்த உபகாரச் சம்பள நிறுத்தத்தை ஆட்சேபித்திருக்க வேண்டியவர் அவராகத்தான் இருந்திருக்க வேண்டும்”, என்று குலசேகரன் அவரது கருத்தை வலியுறுத்தினார்.
“கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் விளைந்த நிதிப் பற்றக்குறையை ஈடு செய்ய, வேறு வழிகளை ஆராயாமல் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையைப் பாழடிக்கும் இது போன்ற செயல்கள் இந்த அரசாங்கத்தின் நிலையற்ற கொள்கையைக் காட்டுகிறது”, என்று அவர் அரசாங்கத்தைச் சாடினார்.
டாக்டர் எஸ். சுப்ரமணியம் உடனடியாகப் பிரதமரிடம் நிலைமையை விளக்கிக் கூறி இந்த உபகாரச் சம்பளம் மீண்டும் நிலைநிறுத்தப்படுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று குலசேகரன் கேட்டுக்கொண்டார்.
“மௌன சாமியார் 2016” – இந்த வருடம் யாருக்கு தருவது என்று அகில உலக இந்துக்களின் கோல்மால் சங்கம் யோசித்து கொண்டிருக்கிறது. அதற்க்காக ‘மக்கள் சேவகர்’ குலா அவர்கள்களின் இந்த பகுதி பெரிதும் உதவும் என்று நான் நம்புகிறேன். “மௌன சாமியார் 2014/2015” பட்டத்தை தட்டி சென்றவர் முன்னால் மா இ கா தலைவரா? அல்லது இந்நாள் தலைவரா? என்று கூட சொல்ல கூட முடியாத துரதிஷ்டசாலி பழனிவேல் அவர்கள்.
தம்பி குலசேகரா! இந்த செத்த பாம்பான டாக்டர் சுப்ரமணியத்தை ‘நோண்டி’எந்தப் பிரயோஜனமும் கிடையாது. உங்களது இந்த அறிக்கை தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு தலையங்கம் எழுதவும், முன் பக்கத்தில் உமது படத்தை போட்டு அலங்கரிக்க மட்டுமே உதவுமே ஒழிய, வேறு எந்தப் பயனும் பெறப் போவதில்லை. அம்னோ மந்திரிகளை குடைந்தெடுக்கும் ‘தில்’ உம்மிடம் இலையா? கல்வி அமைச்சருக்கு எதிராக கொடிப் பிடிக்க, ஆள் திரட்டும் தகுதி,உம்மிடம் ஏன் இல்லாமல் போனது?. கருங்காலிகள், இந்த அம்னோ தீவிரவாதிகளை எதிர்க்கும் துணிவு எதிர்தரப்பு தண்டங்களுக்கு இல்லாமல் போனது, பெரும் வேதனைக்குரிய விஷயம்.
பிரச்னைக்கு மேல் பிரச்சனை வச்சிக்கிட்டு அவரே களைச்சுப் போயிருக்கின்றார் அப்புறம் அவரு எங்ஙனம் மௌனம் களைவது? களிவார்.
நண்பரே! அம்னோ மந்திரி ஆகட்டும், அம்னோ ஆகட்டும் அவர் அவர்களுக்குப் பயப்படுவர் அல்ல! ஆனால் அந்தச் செய்தியை யார் போடுவார் என்று யோசித்தீர்களா? இந்தச் செய்தியைக் கூட எத்தனை தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிடும் என்பதே தெரியவில்லை! டாக்டர் சுப்பிரமணியமே வாயைத் திறக்கவில்லை! அவர் பிழைப்பில் அவர் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளுவரா!
விதை இல்லா சப்பிகளுக்கு ஏன் இந்த பொறுப்பு?
தம்பி குலா,பழனி வேலுவின் ஆட்களை எதிர்கொள்வதற்கே சுப்ரமணியத்துக்கு நேரம் போதவில்லை.இதில் இந்தப் பிரச்னை வேறு.”பழனிவேல்” முருகனுக்கும் அரோகரா..”சுப்பிரமணிய” சுவாமிக்கும் அரோகரா.
22 ஆண்டுகாலம் சாமிவேலு கொட்டை விட்டதன் விளைவு இன்று ஒரு தொடர்கதை ஆகி விட்டது.இவர் மட்டும் அல்ல இனி எவரும் சமுதாய உரிமைகளை கேட்க அல்லது நிலைநிறுத்த போவது இல்லை.சமுதாயம் விழித்தால் வழி உண்டு. இல்லேயேல் எதிர்கால சமுதாயம் உரிமை இழந்த நிலைதான் தொடரும்.
குலா அவர்களே நீங்கள் மக்களால் தேர்ந்தடுத்த நாடாளுமன்ற பிரதிநிதி.சுப்ரமணியத்தை குரைகூரவதை விடுத்து கல்வி அமைச்சரை நேரடியாக கேள்வி கேளுங்கள்.நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புங்கள்.ம இ கா வை குறை சொல்லி எந்த பலனும் இல்லை.
ம இ கா இருப்பதனால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை.
பாவம் இந்திய மாணவர்கள்
இவன் மௌனம் களைய ஒரு rm 1000 அவன் கண் முன் ஆட்டுங்கள் MR குலசேகரன் அவர்களே உடனே கண் முளிதுவிடுவான் இவன் 1000 வெள்ளிக்கு விலை போகும் அரசியல்வாதி என்று MIC வட்டாரத்தில் பிரபலமாக பேசபடுகிறது.
இவங்களுக்கு அசிட் ஊத்து வேள்பாரியையும் , இரும்புத் திருடர் கலையும் .. நியமிக்க நேரம் . ஆனால் ஒரு வழியில் நன்றி . இந்தியர்கள் இனி யாரையும் நம்ப வேண்டாம் என்று சுப்ரா சூப்பராக காட்டி விட்டார் . எல்லாம் ஒரு குட்டையில ஊறின மட்டைகள் தான்.இவர்கள் இப்படி போவது தான் நல்லது. இந்தியர்களின் 100 விழுக்காடு வாக்குகளும் எத்ர்க்கட்சிக்கு செல்லும். அவர்கள் இந்திய பிரதி நிதித்துவத்தை அங்கீகரித்தால் ம.இ, கா அம்போ , நன்றி சுப்ரா