தமிழ் அறவாரியம் உட்பட 28 இந்திய, சீன மற்றும் மலாய் அமைப்புகளின் கூட்டமைப்பான
மலேசிய செயல்திட்ட கூட்டமைப்பு (ஜிபிஎம்)
அதன் தைப்பூச நல்வாழ்த்துகளைத்
தெரிவித்துக்கொள்கிறது.
A celebration of the triumph over evil;
May the evil vanishes and brightness bestows upon Malaysia!
HAPPY THAIPUSAM 2016!
தைபூசம், முருகனுக்கு உகந்த தை மாத பூச நட்சத்திரத்தில் விழா எடுப்பதாகும். நல்வாழ்த்து யாருக்கு? முருகருக்கா? அப்படியானால் முருகரையும் நம்மில் ஒருவராக்கி தரம் தாழ்த்துவதர்க்கா இந்த நல்வாழ்த்துக்கள்? இப்பவெல்லாம் எதுவெதுக்கு நல்வாழ்த்துக்கள் சொல்வது என்று கூட தெரியாமல் தமிழர் போகும் போக்கு அவர்தம் சமய நெறி அறியாது குருடன் குருடனுக்கு வழி காட்டுவதாகத் தெரியுது. இதில் வேறு நமது சமய வழிபாட்டை இன்னதென்று அறியாத மலாய்க்காரர் சீனர் நல்வாழ்த்து சொல்வது இன்னும் வேடிக்கை. தயவு செய்து காரண காரியம் இல்லாமல் சமய வழிப்பாட்டிர்கெல்லாம் நல்வாழ்த்துக்கள் சொல்லி கொண்டிருக்காதீர்கள். அப்புறம் மாதா மாதம் வரும் பிரதோஷ வழிபாட்டிற்கும் சிவனுக்கு நல்வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் நம்ம அறிவாளிகள்!
தைப்பூச நல்வாழ்த்துகள், தேனிக்கு !
தமிழருக்கு தைபூச திருநாளுக்கு வாழ்த்து சொல்வதில் தப்பு இருப்பதாக தெரியவில்லை ! தைப்பூசத்தை ஹிந்து முறைப்படி கொண்டாட சொல்வதில் குறை உண்டு ! ஹிந்துக்கும் தைபூச திருநாளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது எத்தனை தமிழனுக்கு தெரியும் ! வாங்க வருசையாக வந்து வாங்கிகட்டி கொள்ளுங்கள் !
நண்பர் தேனீ அவர்களே! நல்ல விளக்கம் தந்தீர்கள். வாழ்த்துக்கள்.
அதெல்லாம் சரி ,நம்ம கோயில் நடராஜா என்ன நிலவரத்தில் உள்ளார் ?
தைபூச திருவிழா முருகனுக்கு. அன்பால் மனருகி முருகரை நம் மனதில் நிறுத்தி வழிபடுவது நமது வழிபாட்டு முறை. அதுவல்லாது முருகரை வழிபட வேண்டிய பக்தர்களுக்கு வாழ்த்துச் சொல்வதானது எப்படி சமய வழிபாடாகும்? அப்படியானால் நமது தெய்வங்களை வழிபட கூட நமக்கு வாழ்த்துச் சொல்லி வழியனுப்பி வைக்க வேண்டியுள்ளதா? இப்படிப் பட்ட புதுப் புது கலாச்சாரம் வருவதால்தான் இன்று தைப்பூசம் என்னவோ பக்தர்களுக்கு உரிய விழாவாக மாறிவிட்டது. முருகனுக்கு உரிய திருவிழாவாக இல்லை. அதனால்தான் ஆட்டமும் பாட்டமும் ஆரவாரமும் அபிலாசைகளும் தெருவில் தெள்ளித் தெறிக்கின்றன. எங்காவது ஆலயத்தில் அமைதியாக உட்கார்ந்து ஆரவாரம் இல்லாமல் முருகன் மீது அன்பு செலுத்த தைபூசத் திருநாளில் நமது ஆலயத்தில் இடமுண்டா? இந்நாட்டில் வாழும் இசுலாமியர்கள், கிறிஸ்துவர்களும் அவர்தம் சமய நெறிகளை முறையாக அவர்தம் போதகர்களின் வழி அறிந்து செவ்வனே அவர்தம் சமய வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். இன்றைய நிலையில், இந்நாட்டில் வாழும் இசுலாமியர்கள் பலர் அவர்தம் மத நெறிகளை அரேபியர்களை விட சிறப்பான முறையில் பின்பற்றி வருகின்றனர் என்று மத்திய கிழக்கு ஆசிய சுற்றுப் பிரயாணிகள் புகழாரம் சூற்றுகின்றனர். அவர்கள் அவர்தம் சமய நெறியில் பல காத தூரம் முன்னேறி விட்டார்கள். நாமோ இன்றுதான் நமது தைப்பூச திருவிழாவில் நன்னடத்தையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் தேறும் நாள் எந்நாளோ?
மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்
வருணன் மேய பெரு மணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே
…………..தேனிக்கு வாழ்த்துக்கள்..
திரு தேனீ சொன்ன கருத்தை ஆமோதிக்கிறேன் . தெய்வ திருவிழாக்களுக்கு வாழட்டு கூறுவது அறிவான செயல் அல்ல. பண்டிகைகலூகு வாழ்த்து சொல்வதே சரியானது. ஆனால் இதை பலரும் ஏற்கமாட்டனர் . இது தான் தமிழன்.
தேனீ மிக சரியான நேரத்தில் கூறியுள்ளிர்கள் ..
எமது இன தமிழ் கடவுள் முருக பெருமானின் சுறவ காற்குள (தைபூச விழாவை) மற்றவருக்கு வாழ்த்து சொல்லி மகிழ்ச்சியுடன் பகிந்துகொள்வதால், சில அரவேக்காடு பசங்களுக்கு புரிவதில்லை !
தைபூச திருவிழாவை முன்னிட்டு இன்று வசந்தம் நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் சிறப்பான கருத்துக்களை வழங்கிய பாண்டித்துரை அவர்களுக்கும் மற்றும் பங்கேற்பாளர்களுக்கும் மிக்க நன்றி. நமது சமயம் அறிவார்ந்த பக்தி நெறியினைக் கொண்டது என்று அறிந்து செயல்படுவோமானால், மூட நம்பிக்கைகள் கொண்ட சடங்குகள் நம்மை விட்டுத் தானாக அகன்று விடும். நமது சமயம் தூய்மை பெரும்.
அடே மட தமிழனுங்க்களே தைபூசதிக்கு வாழ்த்துக்கள் தேவையில்லை முருகன் சர்வ வல்லமை படைத்தவன் அவனுக்கு எவனுடைய வாழ்த்துக்களும் தேவையில்லை அவனுக்கு வேண்டியது நீங்கள் இறை வழி வாழ்கையை வோட்டுகிரீர்களா ? என்பதே எங்கே முருகன் சன்னதியிலேயே திருடரனுங்க்களே நாட்டின் தலைவன் அரசியல்வாதிகள் வோக்கியமா பெண்கள் கட்புகரசிகளா ஆண்கள் கட்புகரசர்களா சொல்லுங்க பார்போம் ! முருகன் எல்லாவ்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறான் உங்கள் உள்ளே ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் எந்த இயக்கத்தின் வாழ்த்துக்களும் எந்த மனிதனின் வாழ்த்துக்களும் எமது முருகனுக்கு தேவையில்லை , அவன் இறைவனடா !