எஸ்யுபிபி: ஹாடியை சரவாக்கில் அனுமதிக்கக் கூடாது

suppகிறிஸ்துவர்களை  இழித்தும்  பழித்தும்  பேசிய  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  சரவாக்கில்  கால்  பதிக்கத்  தடை  விதிக்க  வேண்டும்  என்று  சரவாக்  ஐக்கிய  மக்கள்  கட்சி (எஸ்யுபிபி)  கேட்டுக்  கொண்டிருக்கிறது.

படித்தவர்கள்  கிறிஸ்துவத்தைப்  புறக்கணிப்பதாக  ஹாடி  பாஸ்  கட்சிப்   பத்திரிகையான  ஹராகாவில்  குறிப்பிட்டிருப்பதை  எஸ்யுபிபி  தலைமைச்  செயலாளர்  செபாஸ்டியன்  திங்  சுட்டிக்காட்டினார்.

கிறிஸ்துவ  பாதிரிமார்கள்  ஆப்ரிக்காவிலும்  சாபா,  சரவாக்கிலும்  கல்வி கற்காத  மக்களை  அணுகி  அவர்களுக்குப்  பணம்  கொடுத்தும்  மற்ற  வகை  உதவிகளைச்  செய்தும்  மதமாற்றம்  செய்ய  முயல்கிறார்கள்  என்றும்  ஹாடி  குற்றஞ்சாட்டி   உள்ளதாகக்  கூறப்படுகிறது.

“கிறிஸ்துவர்களுக்கு  எதிரான  குற்றச்சாட்டுகளை  அவர்  பகிரங்கமாக  மீட்டுக்கொள்ளாதவரை  அவரை  இம்மாநிலத்துக்குள்  வர  அனுமதிக்கக்  கூடாது”, என  திங்  கூறினார்.