ஹாடி: வர்த்தகம் சீனர்கள் கையில், அதனால்தான் டிஏபி டிபிபிஏ-யை ஆதரிக்கிறது

controlபாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்,  டிஏபி  டிபிபிஏ-ஐ  ஆதரிப்பதாகக்  குற்றஞ்சாட்டினார்.  மலேசியாவில்  வர்த்தகம்  சீனர்களின்  கட்டுப்பாட்டில்  இருப்பதுதான்  அதற்குக்  காரணம்  என்றும்  அவர்  சொன்னார்.

டிஏபி-யை  சிங்கப்பூரின்  பெரும்பான்மை  சீனர்களுடனும்  அவர்  இனைத்துப்  பேசினார்.

“நம் குத்தகையாளர்கள்  மேம்பட்ட  சாதனங்களையும்  அனுபவத்தையும்  ஆற்றலையும்  கொண்ட அவர்களின் (டிபிபி உறுப்பு  நாடுகளின்)  குத்தகையாளர்களுடன்  போட்டிபோட  வேண்டியிருக்கும். அவர்களுடன்  போட்டியிட்டால்  நாம்  தோற்போம்.

“திறந்த  டெண்டர்  முறையும்  வரும். சீனர்கள் வர்த்தகத்தைக்  கட்டுப்பாட்டில்  வைத்திருப்பதால்தான்  டிஏபி-யும்  சிங்கப்பூரும்  அதை  ஆதரிக்கின்றன.

“டிபிபிஏ-யால்  பூமிபுத்ரா  சமூகம்தான்  பாதிப்படையும்”, என  டிபிபிஎ- எதிர்ப்புப்  பேரணிக்கு  முன்பு  முகநூலில் வெளியிட்ட  காணொளி  ஒன்றில்  ஹாடி  கூறினார்.