மலேசியாகினி விலை போகாது, முருகா!

 

mkno1இன்று தைப்பூசம். மலேசியாவின் முன்னணி இணையச் செய்தித்தளமான மலேசியாகினி விற்பனைக்கு இல்லை என்று அதன் நிருவனர்கள் பகிரங்கமாக இன்று அறிவித்துள்ளனர்.

பல பிரபலமான இணையச் செய்தித்தளங்களை, மலேசியாவின் முன்னணி செய்தித்தளம் உட்பட, அம்னோ உறவுகள் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் குறித்து எதிர்வினையாற்றிய மலேசியாகினியின் தலைமைச் செயல்முறை அதிகாரி பிரமேஷ் சந்திரன் அவ்வாறான எண்ணங்கொண்ட எந்த முதலீட்டாளரும் இதுவரையில் தங்களைத் தேடி வரவில்லை என்றார்.

அப்படியே வந்தாலும், அவர்களுக்கு வரவேற்பு இருக்காது என்று அவர் மேலும் கூறினார்.

இவ்வளவு காலமாக மலேசியகினிக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கு நன்றி கூறிய பிரமேஷ், அவர்களின் ஆதரவால் மலேசியாகினி சுயேட்சையாகவும் வளமாகவும் இயங்கி வருகிறது என்றார்.

மலேசியாகினியின் செய்தியைப் பெருவதற்கு சந்தா செலுத்தும் ஆதரவாளர்கள் ஆண்டுக்கு ரிம150.00, அல்லது மூன்றாண்டுக்கு ரிம388.00 செலுத்துகின்றனர் என்றாரவர்.

mkno2சந்தா கட்டுமாறு வாசகர்களைக் கேட்பது ஒரு பளுவல்ல. அதற்கு ஈடாக மலேசியாகினி மற்றவர்களின் செல்வாக்கிற்கு அடிபணியாமல் சுயேட்சையாகச் செயல்பட்டு செய்திகளைத் தயவு தாட்சிணையின்றி வெளியிடுகிறது என்பதை பிரமேஷ் வலியுறுத்தினார்.

16 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாகினி தொடங்கப்பட்ட போது அதன் நிருவனர்கள் ஒன்றை திட்டவட்டமாக உணர்ந்திருந்தனர். மலேசியாகினி சுயேட்சையாக இருக்க வேண்டுமானால், அது நிதி விவகாரத்திலும் சுயேட்சையாக இருந்தாக வேண்டும் என்பது அவசியம் என்று மலேசியகினியின் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் கான் கூறினார்.

“வாசகர்களின் ஆதரவு இன்றி மலேசியாகினி அதன் இன்றைய நிலையை அடைந்திருக்க முடியாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்குப் பதில் கூற வேண்டும் என்ற அதன் நிலைப்பாடு மலேசியகினியின் செய்தியாளர்களால் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக வாசகர்கள் ஒரு சிறு தொகையை வழங்கி வருகின்றனர்”, என்று ஸ்டீபன் மேலும் கூறினார்.

செய்தியாளர்களும், ஆசிரியர்களும் மலேசியாகினியை வழிநடத்த வேண்டும் என்பது அதன் நிருவனர்களின் நோக்கமாக இருந்தது என்பதை ஸ்டீபன் வலியுறுத்தினார்.

“மலேசியாகினி அவர்களுக்கும், அனைத்து வாசகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் சொந்தமானது”, என்றாரவர்.

அரசியல் சார்புடைய உரிமையாளர்களின் இரகசியமான கட்டுப்பாட்டிலிருந்து வரும் பாரம்பரிய ஊடகங்களின் நிலை விரைவில் ஓன்லைன்Najib sues Mkini1 உலகத்திலும் பிரதிபலிக்கும் என்றும் ஸ்டீபன் கூறினார்.

ஊடக அமைப்புகள் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடைய வணிக நண்பர்களின் பிடியில் சிக்கிக்கொள்ளாமல் சுயேட்சையாக நிலைத்திருக்க வேன்டுமானால் செய்திகளைப் பெற விரும்புவோர் கூடுதல் நிதி அளிப்புச் செய்ய வேண்டும்.

“அவர்கள் செய்திகளைப் பெற நிதி அளிக்கவில்லை என்றால், அதனைச் செய்ய மற்றவர்கள் தயாராக இருக்கின்றனர். இறுதியில், அரசியல்வாதிகளும், பெரும் பணமும் அதிகாரமும் படைத்த தொழிலதிபர்களும் ஊடகச் சுதந்திரத்தை அனுபவிப்பவர்களாக இருப்பார்கள், மலேசியர்கள் அல்ல”, என்று ஸ்டீபன் தெளிவுபடுத்தினார்.

இதர ஊடக அமைப்புகள் கூடுதல் ஊதியம் வழங்க முன்வந்ததை ஏற்றுக்கொள்ளாமல் மலேசியாகினியுடன் தொடர்ந்து பணியாற்றும் அதன் குழுவினருக்கு ஸ்டீபன் தலைவணங்கினார்.

 

மாதந்தோறும் 9 மில்லியன் நுழைவுகள்

 

Mkini resolve5மலேசியாகினி ஒவ்வொரு மாதமும் கணினி மற்றும் அலைபேசிகள் வழியாக 9 மில்லியன் நுழைவுகளைப் பதிவு செய்கிறது என்று கூறிய பிரமேஷ் சந்திரன், இது விளம்பரம் செய்வோருக்கு மிக முக்கியமானதாகும் என்பதோடு மலேசியாவில் மலேசியாகினி மட்டுமே நான்கு மொழிகளில் வாசகர்களைச் சென்றடையும் ஒரே ஊடகம் என்றார்.

மலேசியாகினியின் முக்கியமான முதலீடு அதன் சொந்தக் கட்டடம் என்று தெரிவித்த பிரமேஷ், அக்கட்டடத்தை வாங்குவதற்கு “ஒரு செங்கல்லை வாங்குங்கள்” என்ற திட்டத்தின் மூலம் வாசகர்கள் ரிம1.7 மில்லியன் நிதி வழங்கியதாக அவர் கூறினார்.

“ஒவ்வொரு நாளும் காலையில் வேலைக்கு வந்ததும் நமது ஆதரவாளர்களின் பெயர்கள் பொரிக்கப்பட்ட 1,000க்கு மேற்பட்ட செங்கற்கால் எழுப்பட்ட சுவர் ஒன்றைக் காணும் போது நாம் உன்னத உணர்வுகளால் ஆட்கொள்ளப்படுகிறோம்.

“அது நாம் நமது சந்தாதார்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் பணி புரிகிறோம், வேறு எவருக்கும் அல்ல என்பதற்கு நிலையான நினைவுறுத்தலாக இருக்கிறது”, என்றார் பிரமேஷ் சந்திரன்.