வெவ்வேறு வகை பாதுகாப்பு மிரட்டல்கள் நிலவுவதைப் பார்க்கையில் தேசிய குடிமையியல் பிரிவை(பிடிஎன்)ச் சீரமைக்க வேண்டிய தேவை இருப்பதாகக் கருதுகிறார் பிரதமர்துறை அமைச்சர் அஸ்லினா ஒஸ்மான் கூறினார்.
மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த “கண்களாகவும் காதுகளாகவும்” இருத்தல் வேண்டும் என்றாரவர்.
“தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் மருட்டல்களை மக்கள் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதை உணர்ந்திருப்பதாக தெரியவில்லை.
“தேசிய தலைவர்களின் படங்களைக் காலில் போட்டு மிதித்தல் போன்ற மரியாதைக்குறைவான செயல்கள், ஐஎஸ் தற்கொலை குண்டு வெடிப்பாளர்கள், சாபாவின் கிழக்குக் கரையில் நடந்துள்ள ஆள்கடத்தல் வேலைகள் போன்றவற்றையும் எண்ணிப் பாருங்கள்”, என அஸ்லினா ஓர் அறிக்கையில் கூறினார்.
கடுமையான குறைகூறல்களுக்கு இலக்கான பிடிஎன்னைச் சீரமைப்பதற்குப் பட்டறைகளை நடத்த சிவில் சமூகத்தைச் சேர்ந்த சுயேச்சை உறுப்பினர்கள் அடங்கிய வாரியம் ஒன்று அமைக்கப்ப்பட்டிருப்பதாக அறிவிப்பு வந்ததைத் தொடர்ந்து அஸ்லினாவின் அறிக்கை வெளிவந்துள்ளது.
இந்த முண்டச்சிக்கு வேறு ஒன்றும் புடுங்க முடியாது–எல்லாம் அதிகாரத்திலும் ஆட்சியிலும் இருந்து சொகுசு வாழ்க்கை அனுபவிக்கவே.