ரிம1.2 பில்லியன் செலவு செய்தாயிற்று, பிடிஎன்னை மூடுவதே நல்லது

notபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  வியாழக்கிழமை  2016  பட்ஜெட்டை  மறுபரிசீலனை  செய்யும்போது  தேசிய  குடிமையியல்  பிரிவு(பிடிஎன்)க்கு  மூடுவிழா  நடத்துவதே  நல்லது.

பிடிஎன்னை  தேசிய  ஒற்றுமையை  வளர்ப்பதற்காக  ஒட்டுமொத்தமாக   திருத்தி  அமைக்கப்போவதாகக்  கூறுவதெல்லாம் வீண்  வேலை  என  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

கடந்த  முப்பதாண்டுகளாக,  நாட்டுப்பற்றையும்  ஒற்றுமையையும்,  இனங்களுக்கிடையில  புரிந்துணர்வையும்  நல்லெண்ணத்தையும்  வளர்த்து  வந்திருக்க  வேண்டிய  பிடிஎன்,  இனவாதம்  ஒற்றுமையின்மை,  சமய  வெறி,  சகிப்புத்தன்மையின்மை,  தீவிரவாதம்  ஆகியவற்றைத்தான்  ஊக்குவித்து  வந்துள்ளது.

அதனால்தான்  முன்னாள்  மலாய்  அரசுப்  பணியாளர்களைக்  கொண்ட  ஜி25  கூட   “அதி  தீவிர  மலாய்  இனவாதம் கொண்ட”  பிடிஎன்னைக்  கண்டித்துள்ளது  என்று  லிம்  கூறினார்

இனவாதத்தை  வளர்க்கும்  அமைப்பு  என்று  உருவாக்கப்பட்டிருக்கும்  தோற்றத்தைப்  போக்குவதற்கு  பிடிஎன்  சீரமைக்கப்பட விருப்பதாக  புதிதாக  நியமிக்கப்பட்டுள்ள  அதன்  தலைமை  இயக்குனர்  இப்ராகிம்  சாஆட்  கடந்த  வியாழக்கிழமை  கூறி  இருந்தார்.