சிவில் உரிமைகளுக்குக் கோரிக்கை விடுக்கும் மலேசியர்களுக்கு தீவிரவாத ஐஎஸ் ஆட்சியில் ஒரு உரிமையும் இருக்காது என்பதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நினைவுறுத்தினார். ஆகவே, தேசிய பாதுகாப்பு மன்ற சட்டவரைவு கொண்டுவரப்பட்டது நியாயமே ஆகும் என்றாரவர்.
கோலாலும்பூரில் பாதுகாப்பு மீதான மாநாட்டில் உரையாற்றிய நஜிப், தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கு எதிரான நடவடிக்கை எல்லாம் நாட்டைப் பாதுகாக்கத்தான் என்றார்.
“இதைச் சொல்ல விரும்புகிறேன். ஐஎஸ் ஆட்சியில் சிவில் உரிமைகள் கிடையாது. பயங்கரவாதச் செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக எந்தப் பாதுகாப்பும் இருக்காது.
“சிவில் உரிமைகளைப் பாதுகாக்க சிறந்த வழி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுதான்.
“அந்தப் பாதுகாப்பை நிலைநிறுத்த நடவடிக்கைகள் எடுப்பதற்காக நான் வெட்கப்படவில்லை”, என்று நஜிப் கூறினார்.
IS காரர்களை ‘பிடிப்பது’ அவ்வளவு சுலபமல்ல. ஏழு IS தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர் என்கிற செய்தி வெளியானது நம்பும்படியாக இல்லை. ‘பத்து வெள்ளி கொடுத்தால் போலீசாரை வாங்கிவிடலாம்’ என வெளிநாட்டு தொழிலாளியான ஒரு வங்காளதேசி சொல்லும் நாடு, நமது நாடு. சர்வாதிகார ஆட்சியை உட்படுத்தும் சட்டமே, இந்த ‘தேசிய பாதுகாப்பு மன்ற சட்டவரைவு’. தனது செயல்பாடுகளை [நஜிப்] நியாயப்படுத்தவே, ‘IS காரர்கள் கைது’ போன்ற ஒரு நாடகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது போல தோன்றுகிறது.
பெரிய ஒழுங்கு பேசுகிறது. மக்கள் பணத்தில் படித்து மக்களின் பணத்தையே சூறையாடும் ஈன ஜென்மம். ஆண்டவன் ஆகாசமதில் தூங்குகின்றானே .