பயங்கரவாதத் தாக்குதலை, குறிப்பாக தற்கொலைக் குண்டு வெடிப்பாளர்களை ஒடுக்குவதற்கு நாடுகள் ஒத்துழைப்பதும் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதும் அவசியமாகும் எனத் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
தற்கொலைக் குண்டு வெடிப்பாளர்கள் கடுமையான சேதங்களை உண்டுப்பண்ண முடியும் என்று கூறிய ஜாஹிட், அவர்கள் சுற்றுப்பயணிகள்போல், அலுவலகப் பணியாளர்கள்போல், தொழிற்சாலை ஊழியர்கள்போல், மாணவர்கள்போல் ஏன் சமயப் பிரச்சாரகர்கள்போலவும் வரக்கூடும் என்றார்.
“தாக்குதல் நடத்தப்போகும் இடத்திலேயே குண்டு தயாரிப்புக்குத் தேவைப்படும் பொருள்களை அவர்களால் பெற முடியும்.
“குண்டு தயாரிப்பது எப்படி என்பதை இணையத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்”. கோலாலும்பூரில் தீவிரவாத- எதிர்ப்பு மாநாடு ஒன்றில் உரையாற்றியபோது ஜாஹிட் இவ்வாறு கூறினார்.
துணைப்பிரதமரின் கருத்து நன்றாகவே உள்ளது. இனிமேல்தான் நம் நாட்டில் தீவிரவாதங்களும், குண்டு வெடிப்புகளும் அதிகமாகப் போகிறது. புரியவில்லையா? KAMUS DEWAN UMNO வை புரட்டுங்கள்.
எல்லாம் நாடு முஸ்லிம் செத்துக்கிட்டு எப்போ எங்கே குண்டு வெடிப்பு பற்றி அரசியால் பேசி நாட்டை ஒரு வழி பன்னுகட .
பார்த்து அமைச்சரே ,உங்களுக்கு வச்சிட போறாங்க .ஏற்கனவே உங்க மகள் வீட்டிலும் ,உங்கள் மெய்க்காப்பாளர் வீட்டிலும் ஓட்டை போட்டுட்டானுங்க .
எல்லாம் வெங்காய பேச்சு.- இவனே பணம் கொடுத்து விட்டு நாடகம் ஆடினாலும் அதிசயம் இல்லை.