இன்று பொங்கல் விழாக்கள் மிக பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. குறுஞ்செய்திகள், மின்னியல் வாழ்த்துக்கள் என பரபரப்பான விழாவாக அமைகிறது. அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பொங்கலை அவரவர் தொகுதிகளில் வைப்பதும் வழக்கமாகி வருகிறது. ஆனால், இந்த கொண்டாட்டங்கள் பொங்கலின் உண்மையான நோக்கத்தையும் அர்த்தத்தையும் மக்களுக்கு எவ்வளவு தூரம் கொண்டு செல்கிறது என்பது மட்டும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. சிலர் இது பாரம்பரிய விழா என்கின்றனர்; சிலர் இது சமய பெருநாள் என்கின்றனர்; மற்றொரு குழு இது உழைக்கும் வர்கத்தின் விழா என்கின்றனர். எதுதான் உண்மை?
இந்த கேள்விக்கு பதில் தேட, நம்மை சிந்திக்க வைக்க, எதிர்வரும் சனிக்கிழமை, 30 ஜனவரி 2016-ல், பிரீக்பீல்ட் லிட்டில் இந்தியாவில், கருத்துக்களம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த கருத்துக்களத்தின் தலைப்பு:- “பொங்கல் விழா – உழவர்க்காகவா அல்லது வியாபாரத்திற்காகவா?”. இதில் கருத்து பரிமாற்றம் செய்வதற்கு அழைக்கப்பட்ட பேச்சாளர்களாக தோழி காமாட்சி, இவர் காராக் சட்டமன்ற உறுப்பினர் ஆவார், தோழி சரஸ்வதி, இவர் ஒரு வழக்கறிஞர், மேலும் தோழர் சேகர், இவர் மலேசிய சோசியலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆகியோர் கருத்துக் களத்தில் இறங்கவுள்ளனர்.
ஆக, பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கெடுக்க அழைக்கப்படுகின்றனர், ஜெரிட் (ஒடுக்கப்பட்ட மக்கள் அணி) மற்றும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற அலுவலகம் ஒன்றினைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்வின் மேற்கண்ட விபரத்திற்கு தோழி கோகிலா அவர்களை 019-2275982 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வேறு வெட்டி வேலை இல்லை என்பதற்கு இப்படி ஒரு கருத்துக் களமா? ஆக்கப்பூர்வமான வேலையை மக்களுக்குச் செய்யுங்கள். அதை விடுத்து இப்படி வெட்டி வேலையை செய்தீர்களானால் அடுத்தத் தேர்தலில் இவர்களுக்கு ஓட்டுப் போட்டு என்ன பயன் என்று கேள்வி கேட்டுப் எதிர் பிரச்சாரம் செய்ய வேண்டி இருக்கும். இதை விடுத்து வெள்ளிக்கிழமை, 29-1-2016 மாலை 6.00 முதல் 10.00 வரை திருமுறை பெருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு திருமுறையில் சைவ கிரியைகள் எனும் தலைப்பில் முனைவர் ஆ. நாகப்பன் அவர்களின் சொற்பொழிவு மலாயா பல்கலைகழக கலைத்துறை வளாகத்தில் நடைபெற உள்ளது. அந்த சொற்பொழிவைக் கேட்டு தமிழர் அவர்தம் சமயத்தை அறிந்து அதன் வழி நில்லுங்கள். சிவ புண்ணியமாவது கிட்டும்.
வியாரத்திற்குதான்னு இருக்கட்டுமே… அதில் என்னா கொரைஞ்சிட போகுது. பானையும், கரும்பும் பூவும் பழமும் தேங்காயும் விக்கிற தமிழ் கடைகாரர்கள் கொஞ்சம் லாபம் பாக்கட்டுமே. என்ன பிரச்சனை அதில். நாட்டுல 2.6 எடுத்தவன எல்லாம் எவனும் கேள்வி கேட்க துப்பு இல்ல. ஒரு விழான்னா அதில வியாபாரமும் இருக்கும்தானே. இன்னிக்கு யாரும் மாடு புடிச்சி ஏர் உழல. ஆனா ஒரு வரலாற நினைச்சி பார்க்கிற பன்பாட்டு விழாதான் பொங்கல். இருந்துட்டு போகட்டுமே. வேற வேலையை பாருங்கப்பா…
காலத்திற்கு ஏற்ற ஒரு ‘கரு’. கண்டிப்பாக மக்கள் அனைவரும் திரளாக வந்து ஆதரவு தர வேண்டும். அத்துடம் நிற்காமல், சிந்திக்க வேண்டிய விசயங்களை மனதில் அசை போட வேண்டும். அவன் சொல்றான் இவன் சொல்றான் என்று மற்றவர்கலின் பேச்சை கன்மூடிதனமாக பின்பற்ற கூடாது. அப்படி ஆட்டு மந்தைகளை உருவாக்கும் நிகழ்ச்சியை மக்கள் புறகணிக்க வேண்டும். குருடன் குருடனுக்கு வழி காட்டுகிறேன் என்பான். அது தவறு. மத பிரசாரங்கள், மத நளினக்க அபிவிருத்திக்காக இருக்கவேண்டும். ஒருவரை தாழ்த்தி இன்னொருவரை புகல கூடாது. அவன் கெட்டவன், இவன் கெட்டவன், அவன் தப்பா சொல்லிதறான், இவன் தப்பா சொல்லிதறான் என்று சொல்லி விட்டு, நான் எது சொன்னாலும் சரியானதைத்தான் சொல்றேன் என்பது மீண்டும் மீண்டும் நம்மை ஏமாற்றும் மூடர்களின் சித்து வேலை. இனிமேலாவது சிந்தித்து பழக வேண்டும் தமிழர்கள். வெருமானே அவன் சொல்றான், நான் கேட்கிறேன் என்றில்லாமல், உங்கள் கேள்விகளை தயங்காமல் கேளுங்கள். நாளை நான்கு பேருக்கு நீங்கள் விளக்கம் தரலாம்.
தமிழகத்துக்கு தெலுங்கு வந்தேறிகளால் கொண்டுவரபட்ட திவாளி விநாயகர் சதுர்த்தி அறிவில் சிறந்த தமிழர்கள் கொண்டாடலாமா ?
அம்மா காமாட்சி தமிழர்கள் நாம் உங்கள்மேல் அளப்பரிய மரியாதைதும் மதிப்பும் வைத்துள்ளோம் …
இந்த மண்ணில் கிந்துக்கள் என்று சொல்லபடுபவர்கலில் பெரும்பான்மையினர் தமிழர்கள் ..
அப்படி இருக்க இங்குள்ள மத அமைப்புக்கள் இந்திய சாமியார்களின் கிளைகளை நடத்துபவர்கள் 100%95 வீதம் தமிழரல்லாதார் ..இவர்களின் பக்தி வியாபார வாடிக்கையாளர்கள் பெரும்பான்மை அறியாத மடதமிழர்கள்!
பெரும்பான்மை தமிழர்கள் சமய அறிவில் நடப்பதை 0…
1.சத்திய சாய் பாபா (தெலுங்கு லிங்கம் விபுதி புகழ் சாமியார் )
2.சீரடி பாபா (தெலுங்கு ராவ் வடநாட்டு சாமி )
3.கரேராமா கரேகிருஷ்ணா(கன்னட ஆரியபிராமணர் உருவாக்கியது)
4.ஆனண்ட மார்க்கா (ஆர்ய வடநாட்டுகாரர் சமசுகிரத போதகர் பாபா)
5.மாதாஜி மலையாளம் அல்லது தெலுங்கு
5.நாரயாணி பீடம் (தெலுங்கு சாமியார் )
6.மேல்மருவத்தூர் அம்மா (தெலுங்கு சாமியாரு அவரு காலை கழுவினால் அம்மா காலையே காலுவிய பலன்கிடைக்குமாம் !)
7.டி டி அம்மா 40 காசு சிறிய குடிநீர் போத்தல் 10 வெள்ளி ..தட்சணை தனியாக ..
8.நித்தியானந்தா கீலிங் மாஸ்டர் நடிகைகள் இளம்பெண்களுக்கு கீலிங்…அலாதி பிரியம் இவருக்கு ..
பிறப்பு தமிழ்நாடு ..தமிழரா இல்ல கருநாநிதிபோல் இவரும்….
இன்னும் பாதிக்குமேல் இங்கு பதியவில்லை சொந்தமா அறிந்துகொள்ளுங்க மக்கா …
தமிழர் சிறப்பாக வாழ ஆரிய கிந்துமதம் சிறந்ததா சைவ மார்க்கம் சிறந்தா ? இது தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கான பட்டிமன்றம் ..(தமிழை தாய்மொழியாக கொண்ட கிறிஸ்தவ இஸ்லாமிய தமிழர்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை )
1தமிழர் சிறப்பாக வாழ ஆரிய கிந்துமதம் சிறந்ததா சைவ மார்க்கம் சிறந்தா ?
2 தமிழகத்தை ஆக்கிரமித்த தெலுங்கர்கள் ஆட்சிகாலத்தில் கொண்டுவரபட்ட திவாளி தமிழர்கள் நாம் கொண்டாதுவது தவிர்க்கப்படவேண்டும் /கொண்டாடலாம் .
3. தமிழர்களுக்கு தமிழர் /இந்தியர் இதில் எந்த அடையாளம் பெருமை சேர்க்கும் ?
4. தமிழ்பேசும் இதரவர் நம்முடன் ஒன்றாக சகோதரர்களாக வாழும்போது அவர்களுக்காக தமிழர்கள் தம் சமய மொழி பண்பாடுகளை விட்டுகொடுக்கலாமா ? மற்றவர்களுக்காக தமிழர் அடையாளத்தை விடுத்து திராவிடியர் இந்தியர் கிந்து என்கிற அடையாளம் தமிழர்களுக்கு சிறப்பை கொண்டுவருமா ?
5. மொழி இனம் சமயம் சார்ந்த பொறுப்புக்கள் அதிகாரத்தை திறமையானவர் என்பதற்காக தமிழை தாய்மொழியாக சாரதா ஒருவரிடம் தமிழர்கள் பொறுப்பை ஒப்படைப்படைகலாம் /இல்ல தவறு .
இதில் ஏதாவது ஒருதலைப்பில் விவாதம் செய்ய தயாரா ?
குறிப்பு தமிழரல்லாதார் தயவுசெய்து முக்கை நுளைகாதிர் ..
உங்களுக்கு புத்தாண்டு இதர கொண்டாட்டம் அனைத்தும் உள்ளது ..நாங்கள் தமிழர்கள் அதை விமர்சிக்கவில்லை ..ஒட்டுமொத்த இந்தியாவுக்கே தேசியமொழியாக இருக்க தகுதி வளம் உடையது தமிழ்மொழி ..யாதும் ஊரே யாவரும்கேளிர் என்று வசனம்பேசி அன்னியர் ஆக்கிரமிப்புகளால் கோமணத்துடன் நிக்கிறோம் ..
அதையும் உருவாமல் விடமாட்டார்கள்போல்! தமிழன் பழைய காட்டு மொழிய பேசுவது தப்பு அறிவு பேருக்கும் ஆங்கிலம் நல்லது சமசுகிரதம் பேசினால் தமிழன் ஆரியர்கல்போல் சிகப்பாக காட்சியளிப்பான் போறபோக்க பார்த்தால் இனிவருங்காலம் இப்படியெல்லாம் தலைப்பு வந்தாலும் வரும் தமிழா எதிர்கொள்ள தயாராக இரு
தேனீ அவர்களுக்கு வணக்கம். முனைவர் அவர்களின் சொற்பொழிவு, நிச்சயம் அறிவியல், அறிவுப்புர்வனதாக, பகுத்தறிவுக்கு ஏற்றதாக இருக்கும். ஆதலால் இந்த சொற்பொழிவை பிறகு, எங்களை போன்றவர்கள் வலை தளத்தில்எந்தமுகவரியில் கேட்கலாம்? அதன் முகவரியை தெரிய படுத்தவும். தேனீ அவர்களுக்கு, எனக்கும் முனைவர் அவர்களின் சமய வகுப்புகளில் கலந்து தெளிவு பெறவேண்டும் என்ற ஆவல்தான். நான் பல வருடங்களாக சொந்த தொழில் செய்வதால் கலந்து கொள்ள முடியாத, நேரயின்மையே காரணம். நன்றி வணக்கம்.
தமிழன் அல்லாதவன் எங்கள் திருநாளை குளறுபடி செய்துவிட்டான் , பொங்கல் திருநாள் 20 ஆயிரம் ஆண்டு முதல் 50 ஆயிரம் ஆண்டு முன்பே கொண்டாடிய திருநாள் , இப்போது இவர்களுக்கு என்ன சந்தேகம் ? தமிழன் அல்லாதவன் எங்கள் திருநாளை குளறுபடி செய்துவிட்டான் , இப்போது திருட்டு திராவிடன் , திராவிட திருநாள் என்று பிதற்றுகிறான் ! அது எங்களின் தமிழர் இன உணர்வு இன்மையே காரணம் என்று நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் , போன ஆண்டு ”உழவன் மடிகிறான் பொங்கல் தேவையா” என்று தலைப்பு கொடுத்து psm கட்சி நன்றாக வாங்கி கட்டிக் கொண்டது ! பொங்கல் திருநாள் உழவர் திருநாள் என்பது யாரும் மறுக்க முடியாது , சுறவம் முதல் நாள் ஆதவன் அருகில் நமது பூமி இருப்பதால் நன்றி சொல்கிறோம் , உழவருக்கு மழை அவசியமானதால் மாரியம்மனுக்கு ( மாரி என்றால் மழை, மழை அம்மன் ) பொங்கல் வைக்கிறோம் நன்றி கடனாக ! உழவனுக்கு துணையாக இருக்கும் மாட்டையும் தமிழன் மறக்கவில்லை , பொதுவாக நன்றி மறவா இனம் எம் இனம் ! 1921 அறிவு தமிழன் இனத்துக்காக ஒரு பண்டிகை வேண்டி சுறவம் முதல் நாள் தமிழர் புத்தாண்டு என்று பிரகபடுத்தினார்கள் , அதை ஏன் இன்னும் தமிழ் இனத்துக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை அறிவு ஜீவிகளே ? அதை விடுத்து பொங்கல் உழவருகா & வியாபாரமா என்ற கேள்வி மயிரு உங்களுக்கு எதற்கு ? எங்கள் பண்டிகை நேரத்தில் வியாபாரிக்கு லாபம் கிடைப்பதால் அவர்களும், எங்களுக்கும் மகிழ்ச்சியே ! இந்த இனத்துக்கு நல்லது ஏதாவது செய்ய வேண்டும் என்றால் , அரசாங்கத்திடம் பொது விடுமுறை பரிந்துரையுங்கள் !
நன்றி உழவர் அவர்களே. நீரும் மலரும் கொண்டு எம்பெருமானை தமிழில் அருச்சித்துப் பாடி வழிபடவேண்டி நால்வர் பெருமக்களின் தேவார திருவாசகத்திலும், சேக்கிழாரின் பெரியபுராணத்திலும் வழி நெடுகிலும் சொல்லப்பட்டுள்ளது. நால்வரும் மற்ற நாயன்மார்களும் வாழ்ந்து வழிகாட்டியதும் அவ்வாரே. இது தமிழர்களுக்குரிய எளிமையான (செலவில்லாத) தூய அன்பு வழிபாடு. ஆரவாரமில்லாது. இறைவனின் அரவணைப்பு வேண்டி நாம் அறிந்த மொழியில் நாம் பாடி வேண்ட அவன் அருள்புரிவான் என்பது நால்வர் காட்டிய வழி. இவ்வழி, தமிழருக்கு நல் இறைவழி என்பதை உணர்த்த அச்சொற்பொழிவு நமக்கு நல்வழி காட்டும். இச்சொற்பொழிவு மலேசிய சைவ சமய பேரவையின் செயலாளர் திரு. அன்பரசன் அவர் ஆற்றுவார். முனைவர் திரு. நாகப்பன் அவர்கள் சைவத்தில் யோகநெறி எனும் தலைப்பில் ஒரு சொற்பொழிவு ஆற்ற இருக்கின்றார்.
( இனிமேலாவது சிந்தித்து பழக வேண்டும் தமிழர்கள். வெருமானே அவன் சொல்றான், நான் கேட்கிறேன் என்றில்லாமல், உங்கள் கேள்விகளை தயங்காமல் கேளுங்கள். நாளை நான்கு பேருக்கு நீங்கள் விளக்கம் தரலாம் ) திலிப் அவர்களுக்கு வணக்கம். அனுமார் (குரங்கு) என்ற கூட்டம், உலகில் ஒரு கால கட்டத்தில், ஓர் இடத்தில் மட்டும் வாழ்ந்ததா? அல்லது அதன் இன விருத்தி (வாரிசு) இன்னும் வாழ்ந்து கொண்டருக்கிறதா? மனித தோற்றத்திற்கு முன்னால் வாழ்ந்த டைனோசர்களின் எலும்பு கூடுகள் இன்றும் கிடைக்கும் போழுது, அனுமார்களின் எலும்பு கூடுகள் இன்று வரை ஒன்று கூட அறிவியலுக்கோ ஆதாரத்துக்கோ கிடைக்க வில்லையே அது ஏன்? ராமர் பாலம் , மனிதன் கட்டியதா? இயற்கையில் உருவானதா? என்ற சர்ச்சை முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது. எனது கேள்வி துருக்கி நாட்டுக்கு பக்கத்திலுள்ள கருங்கடலில் ராமர் பாலத்தை போன்றே மண் திட்டுக்கள் நிறையவே இருக்கின்றன. அவை எப்படி உருவாயின?.https://www.instantstreetview.com/@45.386732,36.769586,11z,1t . திலிபுக்கு எனது நன்றி வணக்கம்.
தமிழில் வழிபடுதல் 1
“ஆறு அது ஏறும் சடையான் அருள்மேவ அவனியர்க்கு, வீறு அது ஏறும் தமிழால் வழிகண்டவன்” என்று திருஞானசம்பந்தரைத் திருத்தொண்டர் திருவந்தாதி அருளிய நம்பியாண்டார் நம்பி புகழ்வார். அதாவது தலையில் கங்கையை அணிந்துள்ள சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கு உலகத்தவர்க்கு உயர்வு தரும் தமிழால் வழிகண்டவர் திருஞானசம்பந்தர் என்று குறிப்பிடுகின்றார். பதிகப் பெருவழியாகிய இறையன்பு நெறியை நமக்கு அளித்தவர் திருஞானசம்பந்தர். தெரிந்த, எளிய, அன்னைத் தமிழிலேயே இறைவனைப் பாடி அடையலாம் என்பதே இதன் கருத்து. இதனையே தமிழர் வழிபடு மரபாகச் சேக்கிழார் தமிழர் வாழ்வியல் பெட்டகமான பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார்.
அடியார்கள் பெருமையை எவ்வாறு, என்னசொல்லிப் பாடுவது என்று சேக்கிழார் இறைவனை உள்கி நின்றபோது, “உலகெலாம்” என்று இறைவன் அன்னைத் தமிழில் அடியெடுத்துக் கொடுத்தார். பெருமானின் சிவஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தர் திருநெறிய தமிழில்தான் இறைவனைப் பாடினார். சிவஞானபால் தமிழ்ஞானம் ஊட்டியதை என்னுகையில் சிந்தை குளிர்கின்றது. சூலை நோயால் துடிதுடித்துத் தமக்கைத் திலகவதியாரிடம் திரு நீறு பெற்று, அதிகை வீரட்டானத்து இறைவனைச் “சலம்பூவோடு தூபம் மறந்தறியேன், தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்” என்று அழகு தமிழில் பாடியே சூலை நோய் நீக்கினார் திருநாவுக்கு அரசர்” என்று இறைவனால் அழைக்கப்பெற்ற அப்பர் பெருமான்.
தமிழில் வழிபடுதல் 2
பெரிய புராணத்தின் முதல் சருக்கமான திருமலைச் சருக்கத்தில் சுந்தரர் பெருமானின் வரலாறு இடம்பெற்றிருக்கின்றது. இவ்வரலாற்றில் இறைவன் தமிழை விரும்பிக் கேட்டதாக சேக்கிழார் குறிப்பிடுகின்றார். தூய மறையினைப் பாடும் இறைவன், “நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக” என்று கூறியதாய்ச் சேக்கிழார்பெரிய புராணத்தில் பதித்துள்ளார். இதன் வழி இறைவனுக்குச் சிறந்த அர்ச்சனை பாடுதலே ஆகும் என்று தெளிவாகிறது. பெருமான் விரும்பிக் கேட்ட உயர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள தமிழர்கள் பெருமானைத் தமிழிலேயே போற்றிப் புகழ்ந்து, அகங்குழைந்து, கண்ணீர் மல்கி வழிபடலாம் என்று புலனாகிறது. பெருமானால் ஆட்கொள்ளப் பெற்ற சுந்தரரும், “பித்தா” என்ற தமிழ்ச்சொல்லைக் கொண்டே பெருமானை முதலில் வழுத்தி வழிபடுகின்றார்.
இறைவனைத் தமிழில் வழிபடுவதே தமிழர் வழக்கு என்பதனைச் சேக்கிழார் பெரிய புராணம் நெடுகிலும் பதிக்கின்றார். தமிழ்ஞானசம்பந்தர் பிறப்பினைப் பற்றி குறிப்பிடும் சேக்கிழார், “திசைஅனைத்தின் பெருமைஎலாம் தென்திசையே வென்றுஏற, மிசை உலகும் பிற உலகும் மேதினியே தனிவெல்ல, அசைவில் செழும் தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல, இசைமுழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலைபெருக” என்று குறிப்பிடுகின்றார்.
“இன்பமே எந்நாளும் துன்பமில்லை”
திருமுறைச் செம்மல், சித்தாந்த இரத்தினம், திருமுறைத் தொண்டர்
திரு ந. தர்மலிங்கம் எம்.எ
(தலைவர், மலேசிய சைவ நற்பணிக் கழகம்)
ஐயா வெட்டி பேச்சார்களே நம் சமுதாயத்தில் இருக்கும் பிரச்சனை உங்கள் கண்ணூக்கு தெரியாதா.கெங்ஸ்டர்,போதைபொருள்,கல்வி,அரசாங்கவேலைவாய்ப்பு.மதமாற்றம் இன்னும் பல பிரச்சனை தலைவிரித்து தையதையனு ஆடுது.அதைவிட்டுவிட்டு,பொஙகல் கொன்டாடுவாதல் வியாபாரி லாபம் அடைகிரானா,உழவர் நன்மை அடைகிரானா,வெட்டி பேச்சு எதற்கு வியாபாரி லாபம் அடைந்தாலும் சமுதாயத்திரற்கு நன்மை தானே நாளைக்கு நிதிவேன்டுமென்றாள் அங்கு தானெ கையேந்த வேன்டும்.
ஐயா உழவன் அவர்களே, தங்களின் கேள்விகல் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவா ? அல்லது ‘விடை சொல்லமுடியாமல் தடுமாறட்டும்’ என்று மாட்டி விடுவதர்க்காகவா ? மேலும் இங்கே நாம் பொங்கலும் புத்தாண்டும் எப்படி இணைகிறது என்று விளக்க முயல்கிறோம். தாங்கள் வெறுமனே வந்து, அனுமானை வம்புக்கு இழுப்பானேன் ? தமிழன் என்ற உணர்ச்சியல் மட்டும் எழுதுபவன் நான் அல்லவே. அனுமானை வைத்து தாங்கள் கேற்பது என்பது, தொல்பொருள் ஆய்விற்கு உட்பட்டது. முடிந்தால் தாங்களே தமிழ் நாடு சென்று, இந்த ஆய்வில் இறங்கலாமே ? அல்லது 2.6 மில்லியன் ரெடி செய்யுங்கள், 3 தமிழ் ஆய்வாளர்களுடன் ஆராய்ச்சியின் நோக்கத்தை சொல்லி, 3 ஆண்டுகளில் ஆரைசியுரையை தயார் செய்ய சொல்வோம். பிறகு உங்களுடன் சேர்ந்து நானும் அதை படித்து தெரிந்து கொள்வேன் அல்லவா ? வெறுமனே தமிழன் என்ற உணர்ச்சியை வைத்து, எனது சிட்ரரிவிர்க்கு எட்டிய அளவில் பொய் சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை பெரியவரே. தொல்பொருள் ஆதாரம் இல்லாமலேயே, 20, 000 ஆண்டு தமிழர்கள் உழவு வேலை செய்தார்கள், 50, 000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் தோன்றியது, அது, இது, தமிழன்டா, தெலுங்கண்டா, அவன்டா, இவண்டா, என்று தான்தொட்ரிதனமாக எனக்கு எழுதவராது. இருப்பினும், உங்கள் ஆர்வத்தை நான் மதிக்கிறேன் கிழவரே. ஒரு கால் நீங்கள் உண்மையை தெரிந்து கொள்பவராக இருந்தால் ? எனவே, சில தெரிந்தவைகளை நான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். முதலில் அனுமான் ஒரு குரங்கினம் என்பதை நீங்களே ஒத்து கொள்கறீர்கள். குரங்குகளுக்கு, 48 chromosome . மனிதர்களுக்கு 46 chromosome . இன்று வரை குரங்குகளின் மீது ஆராய்ச்சி நடந்து கொண்டு தான் இருக்கிறது. உதாரனத்திற்க்கு குரங்கும் மனிதனும் இணைந்ததினால் வந்ததுதான் AIDS என்பார்கள். உண்மை நான் அறியேன்! எனக்கு தெரிந்து குரங்கு இனம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அனுமான் யுகங்கள் கடந்து, தேரேதா யுகத்தில் இருந்து துவாபரக யுகம் வரை இருந்ததாக குறிப்புகள் காட்டுகின்றன. ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்று. டைனோசர்களின் எலும்பு கூடுகள் கிடைத்தன எனவே அவை இருந்தன மற்றவை இல்லை என முடிவிற்கு வரமுடியாது. காரணம் சீனர்களின் டிராகோன் இருந்ததிர்கான எலும்பு கூடு ஆதாரங்கள் சரிவர இல்லை. மேலும், சீன டிராகனும், பறக்கும் டைனோசர் இணைந்த ஒரு மிருகம், ரொமானியாவில் 1997, பனி பாறைகளில் மட்டி கொண்டு, அழுகாமல் கிடைத்தன. இதுவே ஆராய்ச்சிக்கு ஒரு மையில் கல். மேலும் உழவரே, கார்பன் 14 என்னும் கரியபொருள், ஒரு பொருளின் மீது நடத்த பட்டு, அதன் காலத்தை நாம் கணக்கிடுகிறோம். 46, 48 மற்றும் 51 chromosome கொண்ட உயிரினகள் பதபடுத்தபடாவிடில், அவைகள் 120 ஆண்டு காலத்தால் அழிந்து விடும். டைனோசர்களின் எலும்பு கூடுகள் கிடைத்தன ஆனால் அவைகளின் chromosome கணக்கிட முடிய வில்லை. பதபடுதுவது என்பது, உப்பு தண்ணீரில் அல்லது காற்று இல்லாத அறையில் அடைத்தால், நீண்ட காலம் வைத்திருக்கலாம். எகிப்திய மம்மிகள் போல். அனுமானை அப்படி யாரும் பாடம் செய்யாததினால், இன்று உங்களுக்கு என்னால் காட முடியவில்லை. ராமர் பாலத்திற்கு வருவோம். அவர்கட்டியதாகதான் ராமாயணம் கூருகிரது. அதிலும் சில கட்கள் மிதப்பதாகா ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதை youtube பக்கத்தில் தேடுங்கள் Rama Setu – An Engineering Marvel of 5076 BCE . நிறைய கற்கள் மிதக்கின்றன. அனுமான் 12 செப்டம்பர் 5076 BCE யில் லன்காபூரி சென்றதாக தகவல் சொல்கிறது.
மிதக்கும் கற்க்கள் ….https://www.youtube.com/watch?v=ifAFm3avI6E
ராமர் பாலம் என்பது வெறும் மணல் திட்டுதான் என்று நாசா விஞ்யானிகள் ஆவில் கூறி உள்ளனர் , அனுமார் என்னும் குரங்கு கட்டியதாக ஆரியன் விடும் டுபாகூர் கதையை தமிழன் மத்தியில் கட்டவுழ்த்து , தமிழ் மக்களை முட்டாள் ஆக்குவது இவர்களின் தொடர் வேலை ! மன்னார் நீர் அணை ஆள் கடல் ஆக்கி, ஐரோப்பிய கப்பல் மற்றும் உலக நாடுகளின் கப்பல்கள் தமிழ் நாடுக்கு நல்ல வருவாய் ,முன்னேற்றம் அடைந்து விடுமோ என்ற பயத்தில் ராமர் கட்டிய பாலம் குரங்கு கட்டிய பாலம் என்று தொடர்ந்து தடை செய்கிறது வடவன் அரசு ! தமிழரின் 20 ஆயிரம் 50 ஆயிரம் குமரி கண்ட வரலாறு நம்ப மாட்டார்களாம் ! குரங்கு பாலம் கட்டியதை நம்புவார்களாம் ! ஹி ஹி ஹி குரங்கு பசங்க !
திலிப் புராண கதைபிரகாரம் ராமரு பகவான்.
தமிழன் ராவணன் புராண கதைபிரகாரம் அரக்கன் !
ஒரு அரக்கனால் பறக்கும் விமானத்தை உருவாக்க முடிகிறது !
ஒரு குரன்காலும் கடலை கடந்து செல்லமுடியும்போது பகவானுக்கு குரங்கு அணில் பாலம்கட்டிதான் அவரால் கடலை கடக்க முடியும் என்றால் ஏன் பகவான் ராமனுக்கு அந்த சக்தி (சூப்பர் பவர்) இல்லை ?
இன்றைய ஈழத்து வீரன் பிரவாகரன் எப்படி தீவிரவாதியாக காட்டினார்களோ எப்படி அமெரிக்காவால் கொடிய பயங்கரவாதியாக சதாம் ஹுசைனை சித்தரித்தார்களோ அதேபோன்றுதான் பெரும்பலசாலி சிவனடியாரான தமிழன் இராவண பெருந்தகை அரக்கனாக சித்தரிக்கபட்டுள்ளார் .. ஆரிய வந்தேறிகளின் புராண கதைகளில் அரக்கனானவன் கருப்பாகவும் மீசையுடன் தமிழர்களையே சித்தரித்து இருப்பார்கள் ! ஆரியம் வடுகம் தீராபகை ..
“ராமர் பாலம் என்பது வெறும் மணல் திட்டுதான் என்று நாசா விஞ்யானிகள் ஆவில் கூறி உள்ளனர்” என்று தமிழர் நந்தா எழுதி யுள்ளீர். அதன் ஆதாரத்தை வெளியிடுங்கள். எந்த பகுதியில் நாசா இதை தெரிவிதிரிக்கிறது ?
ராமர் பாலம் என்பது வெறும் மணல் திட்டுதான் என்று நாசா விஞ்யானிகள் ஆவில் கூறி உள்ளனர்” 1993 ஆண்டு , மலேசிய நன்பனில் பாருங்கள் ! அப்போது வாலை சுருட்டிக்கொண்டு இருந்தீர்கள் ! இன்று தமிழன் எழுந்து கேள்வி கேட்கும்போது , ஆதாரம் கேட்பதா ?
திலிப் , இதுவே அமெரிகாவில் பாலம் இருந்தால் இயேசு அமைத்த பாலம் என்று நாசா விஞ்யானிகள் கூறியிருப்பார்
அதை தமிழர் நந்தா மறுத்து பேசமாட்டார்.
தீபாவளி பற்றியும் கருத்துக்களம் நடத்தலாமே..! பொங்கல் கருத்துக்களம் ஏற்பாட்டாளர்கள் முன்வருவார்களா..?
தமிழர் நந்தா, தமிழர் எழுச்சிப்பறை , ஐயா உழவன் அவர்களே. நீங்கள் எல்லாம் நல்லவர்கள். அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் தமிழினத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால், பகை உணர்வை வளர்த்து விடாதிர்கள். இந்துவாவாதி (இந்து), தப்பு செய்கிறான் என்றால், அவனை எதிர்க்க, நானும் கன்மூடிதனமாக எதையாவது பேசி, உனைச்சியை மட்டும் மேலோங்க செய்வேன் என்பது சமுக சேவை ஆகா. உதாரனத்திற்க்கு, ஹிண்ட்ராப் உதய குமார் அவர்களை எடுத்து கொள்ளுங்கள். அவர் படித்த சட்ட நுணுக்கங்களை வைத்து, மக்களுக்கு சட்ட, சமுக நலனை யோசிக்கிறார். வழக்கறிஞர் சீலதாஸ் அவர்களை பாருங்கள், சட்ட சிக்கல்கள் சிரும்பான்மையினதவரை எப்படி எல்லாம் பாதிக்குது என்று அலசுகிறார். பாண்டி துறை நல்ல தமிழ் பேசி, அனைவரையையும் கவர்கிறார். இப்படி பல பேர்… என்னை கவர்ந்தவர்கள்…… அவர்களினால் தமிழ் சமுதாயம் நன்மை அடைகிரதே தவிர, சோடை போவதில்லை. ஆனால் சில பேப்பர் புலிகள் இருக்கிராரர்கலே…. ஐயோ ……….ஐயோ……..ஐயோ …. “என்னம்மா இப்படி பன்றிகிலேமா” என்று பாட தோன்றுகிறது. இருப்பினும் நம்மவர்கள் எல்லாம் …… எல்லாம் நல்லவர்கள்; என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். கும்கி, உங்களையும் செய்துதான் சொல்கிறேன்….நம்மவர்கள் நல்லவர்கள்.
“ராமர் பாலம் என்பது வெறும் மணல் திட்டுதான் என்று நாசா விஞ்யானிகள் ஆவில் கூறி உள்ளனர்” 1993 ஆண்டு , மலேசிய நன்பனில் பாருங்கள் ! அப்போது வாலை சுருட்டிக்கொண்டு இருந்தீர்கள் ! இன்று தமிழன் எழுந்து கேள்வி கேட்கும்போது , ஆதாரம் கேட்பதா ?” என்று தமிழர் நந்தா அவர்கள் கோபமாக கேட்டு இருக்கிறார். அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று சொல்லாதீர்கள் என்று அன்றே சொன்னேன். ஐயா, நானும் ஒரு விஞானிதான். விஞானிகளின் கூற்று அவ்வபோது மாறி கொண்டே இருக்கும்……………. “தீபாவளி பற்றியும் கருத்துக்களம் நடத்தலாமே..! பொங்கல் கருத்துக்களம் ஏற்பாட்டாளர்கள் முன்வருவார்களா..?” என்று seeriyan கேடிருக்கிறார்…. இப்படி ஆளு ஆளு கேட்டேர்கள் என்றால்…. நான் என்ன செய்வது ? எனம்மா இப்படி பன்றிங்கலேமா ?
சீரியான் சரியான கேள்வி ..
ஏன்டா திவாளி அளவுக்கு பொங்கலை பெரியளவில் யாரும் கொண்டாடவில்லை ..இப்போதான் கடந்த வருடத்திலிருந்து தமிழர்கள் பெரியளவில் இனமொழி உணர்வுடன் தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டேடுகிரார்கள் ..அதுபோறுக்கவில்லை இந்த இலும்முனாட்டி கம்முனாட்டி கைக்கூலிகளுக்கு !
இப்போ எல்லாம் என்ஜிஒ .அரசியல் கட்சிகள் ,மத அமைப்புக்கள் ,சாமியார்கள் இல்லுமினாட்டிகளின் தேவைக்காக உருவாக்கபடுகிறது .. மிருகங்களை பாதுகாக்கும் அமைப்பு இதை இயக்குவது அமெரிக்காவை தலைமையகமாககொண்டு இல்ல்லுமினாட்டிகள் .. இந்த பி எம் எஸ் கட்சிக்கும் இவர்கள் நிதி உதவி செய்திருக்க வாய்ப்பிருகிறது …
தமிழர்கள் எவ்வளவோ பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் …அதைப்பற்றி ஏதாவது தலைப்பில் பட்டிமன்றம் செய்யலாமில்லை …
இங்குள்ள இந்தியர்களின் பாதிபிரச்சனையை தனி அரசியல் கட்சிசரி இல்ல என் ஜி ஒ க்கள் தீர்த்துவைக்க முடியும் எல்லாமே அரசாங்கந்தான் செய்யணும் பதவி கொடுத்தால்தான் செய்வம் என்கிறது எல்லாம் அயோக்கியத்தனம் ..
குண்டர்கும்பல் /போதை அடிமை / கல்விமேம்பாடு /வியாபார நுணுக்கங்கள் வாய்ப்புக்கள் /இளையசமுதாய வழிகாட்டி தொழில் பையிட்சி ஆலோசனைகள் இப்படி அடுக்கிகிட்டே போகலாம் ..
இதுல்லாம் தேவையே இல்ல ..
தமிழன் எது செய்தாலும் கேக்கமாட்டானுங்க ..மூஞ்சில வர்றவன் போறவன் எல்லாம் காரி துப்பினாலும் துடைத்துவிட்டு போவான் !
தமிழர்களே நம் இனத்துக்கு துளியும் சம்பந்தமில்லாத கிந்து பண்டிகை வழிபாடு நமக்கு தேவை இல்லை ..
அதனால் நாமும் பட்டிமன்றம் செய்வோமா ?
தலைப்பு இப்படி வச்சா நல்லா இருக்குமா ?
1:தமிழர்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத விநாயகர் சதுர்த்தி நாம் கொண்டாடுவது சரி /இல்லை தவறு .
2:தமிழர்களின் பொற்காலம் ஆர்ய வடுக ஆக்கிரமிப்புக்கு முன் /ஆக்கிரமிப்புக்கு பின்
3:திவாளி தமிழகத்தை ஆக்கிரமித்த தெலுங்கு மன்னர்களால் அறிமுகபடுத்தபட்டது அவர்களால் கொண்டாடபட்டது .தமிழர்களா நாம் கொண்டாடுவது சுத்த பைத்தியகாரத்தனம் /கொண்டாடலாம்
இதில் எந்த தலைப்பு தேர்வு செய்யலாம் ?
கும்கி யானைக்கு புத்தி எங்கே போனது ? சிலுவையில் தொங்கிகொண்டு இருப்பது இயேசுவே இல்லை என்று சொல்லும் காலம் இது ! இயேசு பிரான் போன்ற ஒருவரை தொங்க விட்டார்கள் என்று கிருஸ்துவ மக்கள் வாதம் செய்யும் காலம் இது ! ( பின்குறிப்பு ) வடலூர் இராமலிங்க சுவாமிகள் அவர்கள் தீ இட்டு கொளுத்தியதாக ஆரிய வர்க்கம் சொல்கிறது ! அவரே ஜோதி வடிவம் ஆனவர் , ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் ? இயேசுவை விளங்காத கிருஸ்துவர்தான் அவரை சிலுவையில் தொங்குவதாக நம்புவர் !
சீரியன் ! தீபாவளி பற்றியும் கருத்துக்களம் நடத்தலாமே..! பொங்கல் கருத்துக்களம் ஏற்பாட்டாளர்கள் முன்வருவார்களா..? தம்பி ! குரங்கு பாலம் கட்டியதாக நம்பும் இவர்கள், நாம் அவர்களை அழைப்பதே தவறு ! குறைந்த பட்சம் 3 இஞ்சி வாலாவது அவர்களுக்கு முளைத்து இருக்க வேண்டும் அல்லவா ? இந்த கருத்து பதியும்போது நானும் சிரித்துவிட்டேன் !
திலிப் உங்கள் கட்டுரையெல்லாம் அருமை
தமிழர் நந்தா கேள்வி கேட்பது சுலபம் அனால் பதில் சொன்னால் உம்மால் ஏற்றுகொள்ளமுடியவில்லை.
ஐயோ பாவம்
ஓய்வில்லாமல் இரண்டு நாட்களாக இப்பகுதியைப் பார்க்கவில்லை. அதற்குள் பொங்கலில் ஆரம்பித்து, இராமர் பாலத்திக்குப் போய் தீபாவளிப் பற்றி கருத்துக் களம் வேண்டும் என்று வந்து இருக்கின்றது. அனைத்துமே இந்நாளைக்கு ஏற்ற தலைப்புகள்தான்.
எனக்கு உண்மையிலேயே சிரிப்புதான் வருகிறது. இந்துக்கள் அவர்களின் இதிகாசதித்தில் அறியாமையை சொல்கிறார்கள் என்றால், உடனே தமிழர்களும் அதற்க்கு நிகராக ஒரு கதை சொல்லி, கதைக்கு கதையாய் வெல்ல வேண்டும் என்று வாதிடுகிறார்கள். ஐயா பேப்பர் புலிகளா, விவேகானந்தர் கூரியதை இங்கே பதிவிடுகிறேன். “உண்மைக்காக எதையும் இழக்கலாம்; ஆனால் எதர்க்ககவும் உண்மையை இழக்க கூடாது”
யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. இருந்தாலும் மன்னிக்கவும்.
ஒரு தலைப்பு இந்தியர்களை பி.என் அதிகம் ஏமாற்றியதா , பாக்காத்தான் அதிகம் ஏமாற்றுகிறதா இந்த தலைப்பு தான் தேவை