மகாதிரை விசாரிப்பதில் வேகம் காட்டும் போலீஸ், ஜோ லவ் விசயத்தில் செயல்படாமல் இருப்பதேன்?

khairudeenதேசிய  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  1எம்டிபி  ஊழல்  பற்றியும்  அதில்  தொழிலதிபர்  ஜோ  லவ்வுக்குள்ள  தொடர்பு  பற்றியும்  ஆகக்  கடைசித்  தகவல்களைத்  தெரிவிக்க  வேண்டும்  என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்விவகாரம்  தொடர்பில்  தாம்  2014  டிசம்பரில்  செய்த   புகார்  என்னவாயிற்று  என  பத்து  கவான்  அம்னோ  தொகுதி  முன்னாள்  துணைத்  தலைவர்  கைருடின்  அபு  ஹசான்  தெரிந்து  கொள்ள  விரும்புகிறார்.

முன்னாள் பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்மீது  புகார்கள்  செய்யப்பட்ட  இரண்டாவது  நாளிலேயே  அவர்மீது  விசாரணை  தொடங்கி  இருப்பதாக  போலீஸ்  அறிவித்திருப்பதால்  தம்முடைய  புகார்  என்னவாயிற்று  என்று  அவர்  விளக்கம்  கேட்டிருக்கிறார்.

“புகார்தாரர்  என்ற  முறையில்  விளக்கம்  பெற  எனக்கு  உரிமை உண்டு.  போலீசார்  விசாரணைக்காக லவ்வை  அழைத்தார்களா?

“அழைத்திருந்தால்  எப்போது  அழைத்தார்கள்?  விசாரணை  என்னவாயிற்று?  அழைக்கவில்லை  என்றால்  ஏன்  இல்லை? நான்  புகார்  செய்து  நீண்ட  காலமாகிறதே”, என  கைருடின்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.