பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், ஒரு சவூதி இளவரசரிடமிருந்து பெற்ற ரிம2.6 பில்லியன் அரசியல் நன்கொடைக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
“வரி செலுத்த வேண்டிய வருமானம் என்றால் வரி விதிப்போம்; வரிக்கு உள்படாத வருமானம் என்றால் வரி விதிக்க இயலாது”, என உள்நாட்டு வருமான வரி வாரிய (ஐஆர்பி) தலைமை செயல் அதிகாரி முகம்மட் ஷுக்குர் மாபார் தெரிவித்தார்.
அரசியல் நன்கொடைகளுக்கு வரி விதிக்கப்படுவதில்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், நஜிப்பின் வங்கிக் கணக்கில் நன்கொடையாக போடப்பட்ட மிகப் பெரிய தொகைக்கு அவர் வருமான வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
வரி வட்டி யாரை கேட்கிறாய்…என்னோடு வயலுக்கு வந்தாய நாத்து நட்டாயா…
அப்படியானால் ஏராளமான அரசியல் கட்சிகள் திறந்து வைத்துக் கொண்டு கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கலாமோ? அரசியல் கட்சிகளுக்கு வரிவிலக்கு மக்களுக்கு GST வரிச் சுமை!.
பிறகு எப்படி கொள்ளை அடிப்பது? இதுதானே இவ்வளவு நாட்களாக நடக்கிறது.
அது அரசியல் நன்கொடைக்கான ஆதாரம் ??? தனிநபர், மலிவான கணினியை வாங்கி வரி கணக்கு காட்டுவோருக்கே கணினி வாங்கிய அசல் ஆதாரத்தினை கேட்கும் வருமான வரி வாரியம், இந்த 2.6 பில்லியன் நன்கொடைக்கானது என்று எப்படி முடிவு செய்தது?? அனைத்து அசல் ஆதாரங்களும் லஞ்ச ஊழல் வாரியத்திடம் உள்ள வேளையில் எப்படி இந்த முடிவுக்கு வந்தீர்???
நான் என்னேதே சொல்லே .எனக்கு 2013 வருமான வரி வாரியம் 11.20 கட்டா கடிதம் அனிபி நானும் பப்ளிக் பேங்க் காட்ட .அதுக்கு ர்ம்2 சர்வீஸ்
.0,20 GST வரி .ஆகா மொத்தம் ர்ம்13.20.என்ன ஒரு அருமையான நாடு ,